ADVERTISEMENT

அமீரகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா வழக்குகள்..!! இன்று மட்டும் 541 வழக்குகள் பதிவு..!!

Published: 31 Aug 2020, 4:03 PM |
Updated: 31 Aug 2020, 6:21 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில வாரங்களாக பெருமளவில் குறைந்திருந்த கொரோனா வழக்குகள் தற்போது மீண்டும் திடீரென அதிகரித்துள்ளது. அமீரகத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு 200 என்ற குறைவான அளவில் கொரோனா வழக்குகள் பதிவாகியிருந்த நிலையில், இன்று திடீரென 500 க்கும் அதிகமான வழக்குகள் பதிவாகியுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இன்று (திங்கள்கிழமை, ஆகஸ்ட் 31, 2020) புதிதாக 541 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 70,231 ஆக உயர்ந்துள்ளது.

அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு 2 பேர் பலியாகியுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 384 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், இன்றைய நாளில் மட்டும் 331 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 60,931 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.