ADVERTISEMENT

VBM -6 : செப்டம்பர் 16 முதல் 30 வரை ஓமானில் இருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் பட்டியல்..!!

Published: 5 Sep 2020, 9:26 AM |
Updated: 11 Sep 2020, 4:48 PM |
Posted By: admin

வந்தே பாரத் திட்டத்தின் ஆறாம் கட்டத்தில் ஓமானில் இருந்து செப்டம்பர் 1 முதல் 15 வரையிலான தேதிகளில் இயக்கப்படும் விமானங்கள் அறிவிக்கப்பட்டு அதன்படி விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், செப்டம்பர் 16 முதல் 31 ம் தேதி வரையிலும் ஓமானில் இருந்து இந்தியா செல்லும் விமானங்களின் பட்டியலை தற்பொழுது ஓமானில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

தற்பொழுது கூடுதலாக அறிவிக்கப்பட்ட 30 விமானங்களில் 6 விமானங்கள் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது . இந்த ஆறு விமானங்களும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்ததை போன்றே சென்னை மற்றும் திருச்சி விமான நிலையங்களுக்கே செல்லவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விமானங்களின் பயணிக்க விரும்புபவர்கள் இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள docs.google.com எனும் இந்த ஆன்லைன் படிவத்தில் தங்களது விபரங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்றும் படிவத்தை சமர்ப்பித்தவர்கள் ஓமானில் உள்ள ரூவி (Ruwi) மற்றும் வட்டாயா (Wattaya) போன்ற பகுதிகளில் இருக்கக்கூடிய ஏர் இந்தியா அலுவலகத்தை அணுகி டிக்கெட் புக்கிங் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஓமானில் இருந்து தமிழகத்திற்கு செல்லும் விமானங்களின் விபரங்கள்

ADVERTISEMENT