ADVERTISEMENT

UAE: API ஒப்புதல் பெறாத பயணிகள் இலவசமாக பயண தேதியை மாற்றிக்கொள்ளலாம்..!! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு..!!

Published: 17 Sep 2020, 8:28 AM |
Updated: 17 Sep 2020, 8:33 AM |
Posted By: admin

இந்தியாவின் பட்ஜெட் கேரியரான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனமானது, API (Advanced Passenger Information, பயணிகளின் மேம்பட்ட தகவல்) ஒப்புதலைப் பெறாத பயணிகள் தங்களின் பயண தேதியை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இமிகிரேஷன் கவுண்டர்களில் இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணித்த பயணிகள் பெருமளவில் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் புதன்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. API ஒப்புதல் கிடைக்காததன் காரணமாக விமானத்தில் பயணிக்க முடியாதவர்கள் தங்களின் பயண தேதியை இலவசமாக மாற்றிக்கொள்ளலாம் என்றும் மறு முன்பதிவு செய்கையில் கட்டண வேறுபாடு இருந்தால் அந்த தொகையை மட்டும் செலுத்தினால் போதும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் பத்திரிகை, தகவல் மற்றும் கலாச்சாரத்துக்கான தூதர் நீரஜ் அகர்வால் இது குறித்து கூறும்போது, “தற்பொழுது, நாங்கள் இந்த பிரச்சினைகளை குறைவாக எதிர்கொள்கிறோம். மூன்று நான்கு வாரங்களுக்கு முன்பு, பல பயணிகள் API ஒப்புதல் கிடைக்காததால் விமானத்தில் பயணிக்க முடியவில்லை. இந்த API ஒப்புதல் பெறுவதில் ஏற்படும் சிக்கலானது பெரும்பாலும் தொழில்நுட்ப கோளாறின் காரணமாக ஏற்படுகிறது” என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், இரு நாடுகளின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு இது குறித்து தெரிவிக்கப்பட்டு தற்பொழுது இந்த பிரச்சினைகள் பெரும்பாலும் தீர்க்கப்பட்டுள்ளன என்றும் அகர்வால் கூறியுள்ளார்.

இதே போன்று, இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்கும் நபர்கள் கையால் எழுதப்பட்ட RT-PCR சோதனை முடிவுகளை விமான நிலைய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஏனெனில் கையால் எழுதப்பட்ட சோதனை முடிவு அறிக்கைகளை ஐக்கிய அரபு அமீரகம் அல்லது இந்தியாவில் உள்ள சிவில் விமான மற்றும் சுகாதார அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தனது மற்றொரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்திற்கு வரவிருக்கும் பயணிகள் கொரோனாவிற்கான எதிர்மறை சோதனை முடிவுகளை ICMR , PUREHEALTH, MICROHEALTH போன்ற அங்கீகாரம் பெற்ற ஆய்வங்களில் இருந்து மட்டுமே பெற வேண்டும் என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் இருந்து அமீரகம் வருவோர் கவனத்திற்கு..!! கொரோனா சோதனை முடிவு தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்..!!