ADVERTISEMENT

துபாய் : வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டு வந்த போக்குவரத்து அபராத தள்ளுபடி ரத்து..!!

Published: 21 Sep 2020, 1:39 PM |
Updated: 21 Sep 2020, 1:45 PM |
Posted By: admin

துபாயில் அமலில் இருந்த போக்குவரத்து அபராத தள்ளுபடி மூலம் ஒரு வாகன ஓட்டிக்கு 100 சதவீதம் வரை அபராதம் தள்ளுபடி செய்யப்படும் என்ற திட்டம் தற்பொழுது இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் இன்று தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு கொண்டு வரப்பட்ட 100 சதவீத போக்குவரத்து அபராத தள்ளுபடி திட்டத்தின் இரண்டாவது பதிப்பானது இந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கபட்டது. இந்நிலையில், 100 சதவீத அபராதத் தள்ளுபடிகள் இனி வழங்கப்பட மாட்டாது என்று துபாய் காவல்துறையின் போக்குவரத்துத் துறை இயக்குநர் ஜெனரல் ஜுமா சலீம் பின் சுவைதன் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார், இருப்பினும், ஏற்கனவே தள்ளுபடி பெற்ற ஓட்டுநர்களுக்கு இதனால் எவ்வித பாதிப்பு இல்லையென்றும் அவர்கள் தள்ளுபடி பெற்ற தொகையானது அசல் தொகைக்கு மாற்றப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கப்பட்ட, இந்த திட்டமானது, மூன்று மாதங்களுக்கு எவ்வித போக்குவரத்து விதிகளையும் மீறாதவர்களுக்கு, அபராதத்தில் 25 சதவீத தள்ளுபடியும் ஆறு மாதங்களுக்கு விதிகளை மீறாதவர்களுக்கு 50 சதவீத தள்ளுபடியும், மேலும் ஒன்பது மாதங்கள் விதிகளை மீறாமல் வாகனம் ஓட்டியவர்களுக்கு 75 சதவீதம் தள்ளுபடியும் ஒரு முழு ஆண்டு எந்த மீறலும் இல்லாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு 100 சதவீத அபராத தள்ளுபடியும் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

இத்திட்டம் முதலில் அமல்படுத்தப்பட்ட கடந்த ஆண்டில், 557,430 வாகன ஓட்டிகள் இத்திட்டத்தினால் பயனடைந்தனர் என்றும் இதனால் அவர்கள் மொத்தம் 546,970,930 திர்ஹம் அபராத தள்ளுபடி பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.