ADVERTISEMENT

ஓமானில் 2.1 ரிக்டர் அளவில் பதிவாகிய நிலநடுக்கம்..!!

Published: 13 Sep 2020, 9:30 AM |
Updated: 13 Sep 2020, 9:31 AM |
Posted By: admin

ஓமானில் நேற்று (சனிக்கிழமை) இரவு 9.23 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 2.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாகவும் சுல்தான் காபூஸ் பல்கலைக்கழகத்தின் பூகம்ப கண்காணிப்பு மையம் (Earthquake Monitoring Centre) தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

EMC ஆன்லைனில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பஹ்லா மற்றும் தகிலியாவில் சனிக்கிழமை இரவு 9:23 மணிக்கு 2.1 ரிக்டர் அளவில் மற்றும் 5 கி.மீ ஆழத்தில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும், நிஸ்வாவிலிருந்து 27 கி.மீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ஓமானின் அண்டை நாடான ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் புஜைரா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT