ADVERTISEMENT

ஓமானை விட்டு நிரந்தரமாக வெளியேறும் வெளிநாட்டினர்கள் அபராதம் செலுத்த தேவையில்லை..!! தொழிலாளர் அமைச்சகம் தகவல்..!!

Published: 24 Sep 2020, 5:24 PM |
Updated: 24 Sep 2020, 5:24 PM |
Posted By: admin

ஓமானில் பணிபுரிந்து வந்த வெளிநாட்டவர்களில் தற்போது நிரந்தரமாக ஓமான் நாட்டை விட்டு வெளியேறும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த அபராதங்களை செலுத்த வேண்டியதில்லை என்று ஓமான் நாட்டின் தொழிலாளர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த விதிமுறையானது இந்த ஆண்டு இறுதி வரை செல்லுபடியாகும் எனவும் தொழிலாளர் அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் கொரோனா பரவலை கையாள்வதற்கான உச்சக் குழுவின் முடிவுகளுக்கு இணங்க இந்த புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டிருபதும் குறிப்பிடத்தக்கது.

தொழிலாளர் அமைச்சகம் மேலும் தெரிவிக்கையில், “தனியார் துறை நிறுவனங்கள் ஓமான் அல்லாத தொழிலாளர் ஒப்பந்தங்களை நிறுத்தவும் அனுமதிக்கப்படுகின்றன, இந்த நிறுவனங்கள் ஓமானை விட்டு நிரந்தரமாக வெளியேறும் அனைத்து தொழிலாளர்களின் நிலுவைத் தொகையையும் செலுத்த உறுதியேற்க வேண்டும்” எனவும் கூறியுள்ளது.

ADVERTISEMENT