ADVERTISEMENT

UAE: விசிட் விசா காலாவதியானவர்கள் கவனத்திற்கு..!! இன்னும் ஒரு சில நாட்களில் முடியவிருக்கும் காலக்கெடு..!! மீறினால் அபராதம்..!!

Published: 7 Sep 2020, 4:05 PM |
Updated: 7 Sep 2020, 4:09 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் மார்ச்-1 ம் தேதிக்குப் பிறகு காலாவதியான விசிட் அல்லது சுற்றுலா விசாக்களை வைத்திருப்பவர்கள் அபராதம் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேற இன்னும் ஒரு சில நாட்களே கால அவகாசம் உள்ளன. வரும் செப்டம்பர் 11ம் தேதிக்கு முன்னர் காலாவதியான விசிட் விசாவினை வைத்திருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது தங்களின் விசாவினை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று ICA அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

கொரோனா பாதிப்பினால் விதிக்கப்பட்டிருந்த சர்வதேச விமானப் போக்குவரத்து தடையின் காரணத்தினால் ஐக்கிய அரபு அமீரகத்தில் மார்ச் 1 ம் தேதிக்குப் பிறகு காலாவதியான விசிட், டூரிஸ்ட் மற்றும் ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதி வரையிலும் இலவசமாக விசா நீட்டிப்பு செய்யப்படும் என அமீரக அரசு முன்னர் அறிவித்திருந்தது.

பின்னர் அமீரகத்தில் கொரோனாவின் பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு விமான சேவைகள் படிப்படியாக மீண்டும் தொடங்கப்பட்டதால் இந்த இலவச நீட்டிப்பானது கடந்த ஜூலை மாதம் ரத்து செய்யப்பட்டு காலாவதியான விசா வைத்திருப்பவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது விசாவினை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதன்படி, விசிட் விசா மற்றும் சுற்றுலா விசா வைத்திருப்பவர்களுக்கு ஜூலை மாதத்தில் இருந்து ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு பின்னர் ஆகஸ்ட் மாதம் மீண்டும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு செப்டம்பர் 11 ம் தேதிக்கு முன்னராக அவர்கள் அபராதம் செலுத்தாமல் நாட்டை விட்டு வெளியேறலாம் என அமீரகத்தின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையம் (ICA) அறிவித்தது. மேலும், தற்பொழுது கொடுக்கப்பட்டிருக்கும் சலுகை காலத்திற்குள் தங்களின் விசாவை நீட்டித்துக் கொண்டோ அல்லது வேலைவாய்ப்பு விசாவைப் பெற்றுக்கொண்டோ அமீரகத்தில் தொடர்ந்து தங்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது.

இருப்பினும், சலுகை காலம் முடிந்தும் விசா புதுப்பிக்கப்படாமல் அல்லது நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்கும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் ICA தெரிவித்திருந்தது. ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, விசிட் அல்லது சுற்றுலா விசா வைத்திருக்கும் நபர்களின் விசா காலாவதியாகி சலுகைக் காலமும் முடிந்திருந்தால் அவர்களுக்கு முதல் நாள் ஓவர்ஸ்டேக்கு (OverStay) 200 திர்ஹம் அபராதமும் இரண்டாம் நாளில் இருந்து ஒவ்வொரு நாளுக்கும் 100 திர்ஹம் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT