ADVERTISEMENT

இந்தியாவில் இருந்து அமீரகம் வருவோர் கவனத்திற்கு..!! கொரோனா சோதனை முடிவு தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்..!!

Published: 16 Sep 2020, 3:32 PM |
Updated: 16 Sep 2020, 3:40 PM |
Posted By: admin

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்க இருக்கும் நபர்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் கொரோனாவிற்கான நெகடிவ் டெஸ்ட் ரிசல்ட் குறித்த விளக்கம் ஒன்றை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்கும் நபர்கள் கையால் எழுதப்பட்ட RT-PCR சோதனை முடிவுகளை விமான நிலைய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ஏனெனில் கையால் எழுதப்பட்ட சோதனை முடிவு அறிக்கைகளை ஐக்கிய அரபு அமீரகம் அல்லது இந்தியாவில் உள்ள சிவில் விமான மற்றும் சுகாதார அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

அமீரகத்திற்கு வரவிருக்கும் பயணிகள் கொரோனாவிற்கான எதிர்மறை சோதனை முடிவுகளை ICMR , PUREHEALTH, MICROHEALTH போன்ற அங்கீகாரம் பெற்ற ஆய்வங்களில் இருந்து மட்டுமே பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், சோதனை முடிவுகளானது, கொரோனா சோதனை மேற்கொண்ட ஆய்வகத்தில் இருந்து முறையாக கையொப்பமிடப்பட்டு முத்திரையிடப்பட்டிருக்க வேண்டும் என்றும், கையால் எழுதப்பட்ட அல்லது திருத்தங்கள் செய்யப்பட்ட சோதனை முடிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் சோதனை முடிவுகளின் நகல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்பதும் கூறப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைக்காகா வழங்கப்பட்டிருக்கும் 96 மணி நேரமானது சோதனைக்கான மாதிரி கொடுக்கப்பட்ட நேரத்தில் இருந்து கணக்கில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, True NAT / CB-NAAT சோதனை முடிவுகள் விமானத்தில் பயணிக்க தற்சமயம் ஒப்புக்கொள்ளப்படாது என்றும்  RT-PCRஆல் பகுப்பாய்வு செய்யப்பட்ட நாசோபார்னீஜியல் (nasopharyngeal)  மற்றும் ஓரோபார்னீஜியல் (oropharyngeal) ஸ்வாப் சோதனை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT