ADVERTISEMENT

அபுதாபி பிக் டிக்கெட் டிராவில் 10 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை வென்றார் இந்தியர்..!!

Published: 3 Sep 2020, 12:37 PM |
Updated: 3 Sep 2020, 12:37 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற பிக் டிக்கெட் ரேஃபிள் டிராவில் (Big Ticket raffle draw) துபாயில் வசிக்கும் இந்தியர் ஒருவர் 10 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை தட்டிச்சென்றுள்ளார்.

ADVERTISEMENT

ஒவ்வொரு மாதமும் அபுதாபியில் நடைபெறும் பிக் டிக்கெட் டிராவில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுத்தொகையும், உயர் ரக வாகனங்களும் பரிசாக வழங்கப்படும். தற்பொழுது இந்த மாதத்திற்கான பிக் டிக்கெட் ரேஃபிள் டிராவானது (Big Ticket raffle draw) இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த குர்பிரீத் சிங் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு 10 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையானது கிடைத்துள்ளது. இவர் தனது டிக்கெட் எண்ணை (067757) ஆகஸ்ட் 12 அன்று வாங்கியிருந்ததாக தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் குர்பிரீத் சிங், தான் பிக் டிக்கெட் அபுதாபியில் வெற்றி பெற்றதை இன்னும் நம்ப முடியவில்லை என்றும் வெற்றி பெற்றதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இவரை அடுத்து இரண்டாவதாக வெற்றி பெற்ற நபர் 1 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை வென்றுள்ளார்.

ADVERTISEMENT

இதனையடுத்து, அடுத்த மாதத்திற்கான 12 மில்லியன் டிராவிற்கான டிக்கெட் செப்டம்பர் 30 வரை கிடைக்கும் என்றும் அக்டோபர் 3 ம் தேதி அதற்கான டிரா நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர ஆறு கூடுதல் ரொக்கப் பரிசுகளும், சொகுசு கார்களை வெல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான டிக்கெட்டை www.bigticket.ae என்ற வலைத்தளம் மூலமாகவோ அல்லது அபுதாபி சர்வதேச விமான நிலையம் அல்லது அல் அய்ன் சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் பிக்டிக்கெட் ஸ்டோர்ஸிலோ (Big Ticket Stores) வாங்கி கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT