ADVERTISEMENT

குவைத் கொரோனா அப்டேட் (செப்டம்பர் 1, 2020) : பாதிக்கப்பட்டோர் 702 பேர்..!! குணமடைந்தோர் 433 பேர்..!!

Published: 1 Sep 2020, 2:07 PM |
Updated: 1 Sep 2020, 2:07 PM |
Posted By: admin

குவைத்தில் இன்று ( செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 1, 2020) புதிதாக 702 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக குவைத்தின் சுகாதார அமைச்சகம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குவைத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 85,811 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

குவைத்தில் கொரோனாவிற்கு 3 பேர் பலியாகியுள்ளனர். இதனால் குவைத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 534 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்றைய நாளில் மட்டும் 433 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 77,657 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT