ADVERTISEMENT

ஷார்ஜாவில் 4 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள மாபெரும் விற்பனை கண்காட்சி..!!

Published: 27 Sep 2020, 9:39 AM |
Updated: 27 Sep 2020, 9:39 AM |
Posted By: admin

ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் வரும் அக்டோபர் 1 முதல் 4 வரை பேஷன் மற்றும் எலக்ட்ரானிக் தயாரிப்புகள் கண்காட்சியான ‘தி கிரேட் ஷாப்பிங் காம்பைங் 2020’ (The Great Shopping Campaign 2020) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் 100 க்கும் மேற்பட்ட முக்கிய சர்வதேச நிறுவனங்கள் பங்கேற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த கண்காட்சியில் பேஷன், அணிகலன்கள், வீட்டு உபகரணங்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் நிபுணத்துவம் பெற்ற 100 க்கும் மேற்பட்ட முக்கிய சர்வதேச பிராண்டுகளின் பெரிய மற்றும் மாறுபட்ட பிரத்யேக சலுகைகள் மற்றும் உயர்தர தயாரிப்புகள் இடம்பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

எக்ஸ்போ சென்டர் ஷார்ஜாவின் தலைமை நிர்வாக அதிகாரி சைஃப் முகமது அல் மிட்ஃபா இது குறித்து கூறுகையில், “செப்டம்பர் மாதம் நடைபெற்ற ‘எக்ஸ்போ எலெக்ட்ரானிக்ஸ்’ (‘Expo Electronics’) கண்காட்சியின் வெற்றியைத் தொடர்ந்து ‘தி கிரேட் ஷாப்பிங் காம்பைங் 2020′ நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. செப்டெம்பர் மாதம் நடைபெற்ற எக்ஸ்போ எலெக்ட்ரானிக்ஸ்’ கண்காட்சியானது 15,000க்கும் மேற்பட்ட  பார்வையாளர்களைக் கண்டது” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT