ADVERTISEMENT

ஆகஸ்ட் மாதத்தில் காலாவதியான குடியிருப்பு விசாக்களின் செல்லுபடி காலம் நீட்டிப்பு..!! சவூதியின் பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் தகவல்..!!

Published: 8 Sep 2020, 9:17 AM |
Updated: 8 Sep 2020, 9:18 AM |
Posted By: admin

சவூதி அரேபியாவின் ரெசிடென்ஸ் விசா வைத்திருந்து தற்பொழுது வெளிநாடுகளில் இருக்கும் குடியிருப்பாளர்களின் விசாக்களானது எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் ஒரு மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக சவூதியின் பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

சவூதியின் பாஸ்போர்ட் பொது இயக்குநரகம் திங்களன்று தனது இணையதளத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையில், சவூதி அரேபியாவின் Exit அண்ட் Re-Entry விசா வைத்திருந்து தற்பொழுது வெளிநாடுகளில் இருக்கும் நபர்கள் மற்றும் வணிக வர்த்தகத்தை தொழில்களாகக் கொண்டவர்கள் இந்த விசா நீட்டிப்பின் மூலம் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒரு மாத கால விசா நீட்டிப்பானது ஆகஸ்ட் 1 முதல் 31 வரையிலான காலகட்டத்தில் காலாவதியான ரெசிடென்ஸ் விசாவை வைத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய நடவடிக்கையானது மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் தேசிய தகவல் மையத்துடன் ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக ஜூலை மாதம், சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அவர்கள், சவூதியில் உள்ள வெளிநாட்டவர்களுக்கும் சவூதி விசா வைத்திருந்து வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கும் காலாவதியான ரெசிடென்ஸ் விசாக்களை மூன்று மாதங்களுக்கு அபராதம் இன்றி நீட்டிக்க ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.