ADVERTISEMENT

அமீரகத்தில் நாளையுடன் முடியவிருக்கும் கோடைகாலம்..!! வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் மையம் தகவல்..!!

Published: 20 Sep 2020, 5:56 PM |
Updated: 20 Sep 2020, 5:56 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை செப்டம்பர் 21 திங்கள்கிழமையே இந்த வருட கோடைகாலத்தின் அதிகாரபூர்வ கடைசி நாளாக இருக்கும் என்று வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் அரபு ஒன்றியத்தின் உறுப்பினர் இப்ராஹிம் அல் ஜர்வான் அவர்கள் இன்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து ஷார்ஜா ஊடக அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பின் படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் இலையுதிர் காலமானது செப்டம்பர் 22 மாலை 5.31 மணி முதல் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடியாக பூமத்திய ரேகைக்கு மேல் இருக்கும் சூரியன், தெற்கு அரைக்கோளத்தை நோக்கி நகரத் தொடங்கும் என்றும் இதனால் பகல் மற்றும் இரவு அந்த நாளில் சம நீளமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து இனி வரக்கூடிய நாட்களில் பகல் நேரம் குறைவாகவும் இரவு நேரம் அதிகமாகவும் இருக்கும் என்றும் கூறியுள்ளது. இதன் பிறகு அடுத்த வருடம் மார்ச் 20 ஆம் தேதி அன்றே ஒரு நாளின் பகலும் இரவும் மீண்டும் சம நீளமாக இருக்கும் என்றும் ஷார்ஜாவின் வானியல் மற்றும் விண்வெளி அறிவியல் மையம் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

தற்போது அமீரகத்தில் வெயிலின் தாக்கமும் ஓரளவு குறைந்திருப்பதும், அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மூடுபனி காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது.