ADVERTISEMENT

UAE: பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறிய இரண்டு ஷாப்பிங் சென்டர்கள் தற்காலிகமாக மூடல்..!!

Published: 22 Sep 2020, 8:14 AM |
Updated: 22 Sep 2020, 8:14 AM |
Posted By: admin

உலகெங்கிலும் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் எடுத்துவரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மீறிய இரண்டு வணிக மையங்கள் தற்காலிகமாக அஜ்மானின் பொருளாதார மேம்பாட்டுத் துறையால் மூடப்பட்டதாக நேற்று திங்கள்கிழமை பொருளாதார மேம்பாட்டுத் துறை வெளியிட்டிருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நேரடி ஆய்வு மற்றும் பின்தொடர்தல் பிரிவின் மேலாளர் மஜீத் அல்சுவைடி இந்த நடவடிக்கை குறித்து கூறுகையில், “தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அமீரகத்தின் வணிக மையங்களில் மேற்கொள்ளப்பட்ட விரிவான ஆய்வுப் பிரச்சாரங்கள், வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரத் தேவைகளுடன் கூடிய வசதிகளின் அளவை உறுதி செய்கின்றன. அஜ்மானில் உள்ள இரண்டு ஷாப்பிங் மையங்களில் இந்த ஆய்வுக் குழு ஆய்வு நடத்தியது” என்று கூறியுள்ளார்.

மேலும் “ஆய்வின் முடிவில் அந்த இரு மையங்களும் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்காக தற்போது தற்காலிகமாக மூடப்பட்டன, மேலும் அரசு வகுத்துள்ள அனைத்து நிபந்தனைகளும் தேவைகளும் இணங்குவதை உறுதிசெய்த பின்னர் அவை பின்னர் திறக்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

கொரோனா பரவல் கட்டுப்படுத்தல் தொடர்பாக தகுதிவாய்ந்த நிறுவனங்கள் வழங்கிய சுற்றறிக்கைகளை கடைபிடிப்பதை உறுதி செய்வதற்கும், நிர்வாக மற்றும் சட்டரீதியான தண்டனைகளிலிருந்து தவிர்ப்பதற்கும், அஜ்மானின் அனைத்து பொருளாதார வசதிகளையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை உறுதி செய்யவும் நேரடி ஆய்வுகள் தொடரும் எனவும் அல்சுவைடி வாலியுறுத்தியுள்ளார்.

 

ADVERTISEMENT