ADVERTISEMENT

அமீரகத்தில் கடந்த ஒரு நாளில் மட்டும் 1,000 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு…!!

Published: 23 Sep 2020, 10:37 AM |
Updated: 23 Sep 2020, 10:38 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று (புதன்கிழமை, செப்டம்பர் 23, 2020) புதிதாக 1,083 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 87,530 ஆக உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தில் இன்று கொரோனாவிற்கு ஒருவர் பலியாகியுள்ளார். இதனால் அமீரகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 406 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இன்றைய நாளில் மட்டும் 970 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரையில் 76,995 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக குணமடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT