ADVERTISEMENT

மறு அறிவிப்பு வரும் வரையிலும் கடற்கரைகள் செல்வதற்கான தடை நீடிக்கும் என உச்சக்குழு அறிவிப்பு..!!

Published: 23 Oct 2020, 1:54 PM |
Updated: 23 Oct 2020, 1:56 PM |
Posted By: admin

ஓமான் நாட்டில் கடந்த அக்டோபர் 11 ஆம் தேதியிலிருந்து 24 ஆம் தேதி வரையிலான நாட்களில் கொரோனாவினைக் கட்டுப்படுத்தும் விதமாக இரவு நேர இயக்கத்தடையானது அறிவிக்கப்பட்டது. மேலும் இரவில் கடைகள் மற்றும் பொது இடங்களை மூடுவது கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த உதவும் என்றும் தெரிவிக்கபப்ட்டிருந்தது. இந்த இரவு நேர இயக்க கட்டுப்பாடுகள் இரவு 8 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

ஓமானில் மீண்டும் இயக்கத்தடை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பொதுமக்கள் கடற்கரைகள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நாளையுடன் இயக்கத்தடையானது முடிவடையவிருப்பதாக உச்சக்குழு தெரிவித்திருந்த நிலையில், கடற்கரைக்கு செல்வதற்கான தடையானது மறு அறிவிப்பு வரும் வரை நீடிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம், ஓமானில் இயக்கத்தடை நீக்கப்பட்டாலும் பொதுமக்கள் கடற்கரைகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரையிலும் செல்ல முடியாது என்பது தெளிவாகியுள்ளது.

ADVERTISEMENT