ADVERTISEMENT

துபாய்-ஷார்ஜா இடையே பேருந்து சேவைக்கானா பிரத்யேக புதிய வழித்தடம்..!! 15 நிமிட பயண நேரம் குறையும் எனவும் RTA தகவல்..!!

Published: 23 Oct 2020, 1:46 PM |
Updated: 23 Oct 2020, 1:50 PM |
Posted By: admin

துபாயில் வரும் அக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை முதல், துபாய் ஷார்ஜாவிற்கு இடையே பேருந்து செல்வதற்கான ஒரு புதிய பாதை திறக்கப்படும் என்று RTA தெரிவித்துள்ளது. இந்த புதிய பாதையின் மூலம், துபாய் ஷார்ஜா இடையேயான போக்குவரத்து நேரம் 15 நிமிடங்கள் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நாளில், ஒரு புதிய மெட்ரோ இணைப்பு பஸ் (F81) அல் குசைஸ் தொழில்துறை பகுதியிலிருந்து அல் நஹ்தா மெட்ரோ நிலையத்திற்கு இயக்கப்படும் என்று துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அல் குசைஸில் இருந்து இயக்கப்படவிருக்கும் புதிய மெட்ரோ இணைப்பு பஸ் சேவையானது (F 81) ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் கிடைக்கும் என்று ஆர்டிஏவின் பொது போக்குவரத்து நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாட்டு இயக்குனர் அடெல் சக்ரி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் கூறுகையில், “துபாயில் உள்ள யூனியன் மெட்ரோ நிலையம் மற்றும் ஷார்ஜாவில் உள்ள அல் ஜுபைல் நிலையம் ஆகியவற்றுக்கு இடையேயான பயணிகளுக்கு அல் கான் மற்றும் மம்சார் இணைப்புகளில் (E303)பேருந்து செல்வதற்கு ஒரு பிரத்யேக பாதையை RTA திறக்கும. போக்குவரத்து நெரிசலான நேரங்களில் இந்த பாதையில் பேருந்து இயக்கப்படுவதால் மூலம் துபாய், ஷார்ஜாவிற்கு இடையேயான போக்குவரத்து நேரம் சுமார் 15 நிமிடங்கள் குறையும். இந்த புதிய பாதைக்கு பத்து இரண்டடுக்கு தளம் கொண்ட பேருந்துகளும் (Double Decker Bus) இயக்கப்படும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அவர் தொடர்ந்து கூறுகையில், “ஞாயிற்றுக்கிழமை முதல் பல பேருந்து வழித்தடங்கள் மாற்றப்பட்டு மேம்படுத்தப்படும். ரூட் 77, எமிரேட்ஸ் மெட்ரோ நிலையம் வழியாக RTA -வின் தலைமை அலுவலகத்திற்கு நீட்டிக்கப்படும். அதே போன்று ரூட் C 19 ரத்து செய்யப்படும், மேலும் ரூட்ஸ் X 94, X 02, DPR 1, 367, 97, 64 A மற்றும் 7 ஆகியவற்றின் சேவை நேரத்தில் மாற்றங்கள் செய்யப்படும்” என்று கூறியுள்ளார்.

 

ADVERTISEMENT