ADVERTISEMENT

உலகில் முதன் முறையாக அமீரகம் வரும் விசிட்டர்களுக்கு இலவச கொரோனா PCR பரிசோதனை..!!

Published: 7 Oct 2020, 7:47 PM |
Updated: 8 Oct 2020, 6:10 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் 2020 டிசம்பர் 31 வரை சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு PCR பரிசோதனையை இலவசமாக வழங்க இருப்பதாக ராஸ் அல் கைமா சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (RAKTDA) அறிவித்துள்ளது. அமீரகம் வரும் சுற்றுலா பயணிகளில் ராஸ் அல் கைமாவில் தங்கியிருந்து அங்குள்ள விமான நிலையம் வழியாக புறப்படும் சர்வதேச பார்வையாளர்களுக்கு, ராஸ் அல் கைமா சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் மற்றும் RAK மருத்துவமனை ஆகியவை இனைந்து இலவச கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இது குறித்து புதன்கிழமை ராஸ் அல் கைமா சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், சர்வதேச பார்வையாளர்களுக்கு RAK மருத்துவமனை அல்லது அல் ஹம்ரா மாலில் இருக்கக்கூடிய RAK மருத்துவ மையத்தில் இலவச PCR சோதனை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பார்வையாளர்களுக்கும், விருந்தினர்களுக்கும் PCR சோதனையை இலவசமாக வழங்குவதன் மூலம் ராஸ் அல் கைமா உலகளவில் முதல் நகரமாக திகழ்வது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஸ் அல் கைமாவில் இருக்கக்கூடிய ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் விரிவான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக, பீரோ வெரிட்டாஸ் என்ற நிறுவனத்தினால் பாதுகாப்பானது என்று சான்றிதழ் பெற்ற உலகின் முதல் நகரமாக அறிவிக்கப்பட்டதும் மற்றும் உலக ஹோட்டல் மற்றும் சுற்றுலா கவுன்சில் (WTTC) பாதுகாப்பான பயண முத்திரையைப் பெற்றிருந்தும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இதேபோன்று ராஸ் அல் கைமாவில் இருக்கக்கூடிய ஹோட்டல்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கொரோனாவிற்கான இலவச PCR பரிசோதனை வழங்கப்படவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.