ADVERTISEMENT

அபுதாபி தவிர்த்து பிற பகுதிகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் அமீரகம் திரும்ப ICA ஒப்புதல் தேவையில்லை..!! ஏர் அரேபியா தகவல்..!!

Published: 13 Oct 2020, 4:13 PM |
Updated: 13 Oct 2020, 4:13 PM |
Posted By: admin

வெளிநாடுகளிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் திரும்பும் அமீரக குடியிருப்பாளர்களில் அபுதாபி மற்றும் அல் அய்ன் வழங்கிய குடியிருப்பு விசா கொண்ட குடியிருப்பாளர்கள் மட்டுமே தற்போது அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய அதிகாரசபையிலிருந்து (ICA) பச்சை நிற சமிக்ஞையைப் பெற வேண்டும் என்றும் அமீரகத்தின் பிற பகுதிகளில் வசிக்கும் அமீரக குடியிருப்பாளர்கள் அமீரகத்திற்கு திரும்பி வர முன் ஒப்புதல் பெற தேவையில்லை என்றும் ஷார்ஜாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் அரேபியா இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஷார்ஜா சர்வதேச விமான நிலையத்தை தலைமையிடமாகக் கொண்ட ஏர் அரேபியா விமான நிறுவனம், அக்டோபர் 15 வியாழக்கிழமை முதல் ராஸ் அல் கைமா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகளை துவங்கவிருக்கும் நிலையில், அபுதாபி மற்றும் அல் அய்ன் குடியிருப்பாளர்கள் ஷார்ஜா மற்றும் ராஸ் அல் கைமா ஆகிய இரு விமான நிலையங்களுக்கும் பயணம் செய்யலாமா என்பது குறித்த சந்தேகத்திற்கு விளக்கமளிக்கும் விதமாக ஏர் அரேபியா இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த செய்தியில் விமான நிறுவனம், ஏர் அரேபியாவில் பயணிக்கும் அபுதாபி அல்லது அல் அய்ன் வழங்கிய குடியிருப்பு விசா கொண்ட பயணிகள் தங்களது நுழைவு அனுமதியை ICA வலைதளத்தில் சரிபார்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் அபுதாபி மற்றும் அல் அய்ன் குடியிருப்பாளர்களுக்கு ICA விடமிருந்து பச்சைநிற சமிங்கை அவசியம் என்பது குறித்து நேற்று முன்தினம் ஏர் அரேபியா தனது பயண முகவர்களுக்கு வாட்ஸ்அப் வழியாக தகவல் அனுப்பியிருந்ததாக பயண முகவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT