ADVERTISEMENT

போக்குவரத்து அபராதத்தில் 50% தள்ளுபடி வழங்கும் பட்டியலில் நான்காவதாக இணைந்த ஷார்ஜா..!!

Published: 26 Nov 2020, 3:14 PM |
Updated: 26 Nov 2020, 3:17 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் 49-வது தேசிய தினத்தை முன்னிட்டு 50 சதவீத போக்குவரத்து அபராத தள்ளுபடி வழங்கும் பட்டியலில் அடுத்தபடியாக ஷார்ஜா இணைந்துள்ளது. ஏற்கெனவே அஜ்மான், ராஸ் அல் கைமா, ஃபுஜைரா ஆகிய பகுதிகளில் போக்குவரத்து அபராதத்திற்கு 50 சதவீத தள்ளுபடி அறிவிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது நான்காவதாக ஷார்ஜா அரசும் 50 சதவீத தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த தள்ளுபடியானது டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்கி 49 நாட்கள் நீடிக்கும் என்று ஷார்ஜா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடுமையான விதி மீறல்கள் தவிர மற்ற அனைத்து போக்குவரத்து மீறல்களும் இந்த தள்ளுபடியில் சேர்க்கப்படும் என்று ஷார்ஜா காவல்துறையின் தளபதி மேஜர் ஜெனரல் சைஃப் அல் ஸாரி அல் ஷம்ஸி அவர்கள் தெரிவித்துள்ளார். மேலும், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து வாகனங்கள் (vehicle impoundments) மற்றும் போக்குவரத்து புள்ளிகளும் (black points) ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

வாடிக்கையாளர்களுக்கான சேவைகளை எளிதாக்குவதற்கும் அவர்களை மகிழ்விப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஷார்ஜா காவல்துறை எடுக்கும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக அஜ்மான் டிசம்பர் 2 ம் தேதி முதல் அடுத்த ஒரு மாதத்திற்கும், ராஸ் அல் கைமா டிசம்பர் 2 ம் தேதி முதல் 8 ம் தேதி வரை என ஒரு வாரத்திற்கும், ஃபுஜைரா டிசம்பர் 2 ம் தேதி முதல் 15 ம் தேதி வரையும் போக்குவரத்து அபராதத்தில் 50 சதவீத தள்ளுபடி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT