ADVERTISEMENT

அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு போக்குவரத்து அபராதத்தில் 50 சதவீதம் தள்ளுபடி அறிவிப்பு..!!

Published: 23 Nov 2020, 1:02 PM |
Updated: 23 Nov 2020, 1:02 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் 49-வது தேசிய தினத்தை முன்னிட்டு, அஜ்மானில் வசிப்பவர்கள் போக்குவரத்து அபராதத்தில் 50 சதவீத தள்ளுபடியை பெறலாம் என்று அஜ்மான் காவல்துறை அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

வரும் டிசம்பர் 2-ஆம் தேதி தொடங்கும் இந்த திட்டம் ஒரு மாதத்திற்கு இயங்கும் என்று அஜ்மான் காவல்துறை தனது சமூக ஊடக தளத்தில் தெரிவித்துள்ளது. இந்த போக்குவரத்து அபராத தள்ளுபடி திட்டமானது நவம்பர் 23-க்கு (இன்று) முன்னர் அஜ்மானில் வழங்கப்பட்ட அனைத்து வகையான அபராதங்களையும் உள்ளடக்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வாகன ஓட்டிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுவது அல்லது வாகனத்தின் இயந்திரம் அல்லது சேஸிஸில் (chassis) மாற்றங்கள் செய்வது போன்ற விதிமீறல் புரிந்தோருக்கு அபராதத்தில் இருந்து தள்ளுபடி கிடையாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT