ஐக்கிய அரபு அமீரகத்தில் பல விற்பனை நிலையங்கள் இந்த வருடம் (2020) முடிவடையவிருப்பதை முன்னிட்டு பொருட்களுக்கு பல்வேறு தள்ளுபடிகளை அறிவித்த வண்ணம் இருக்கின்றன. அதனை தொடர்ந்து அமீரகத்தில், இன்று முதல் ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் Black Friday விற்பனையை தொடங்கியுள்ளன. இது yellow friday, white friday என்றும் கூறப்படுகிறது. இந்த விற்பனையின் கீழ், பல்வேறு பிராண்டுகளின் பொருட்களுக்கு 90 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Amazon
Amazon.ae அதன் Black Friday விற்பனையை நவம்பர் 24 (செவ்வாய்க்கிழமை) முதல் நவம்பர் 30 வரை இயக்கும் என்று தெரிவித்துள்ளது. ஆனால், அதில் Prime Member-ஆக இருப்பவர்களுக்கு இன்று (நவம்பர் 23) காலை 11 மணி முதலே Black Friday விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பல்வேறு வகையான சிறந்த பிராண்டுகளின் பொருட்களை மிகக் குறைந்த விலையில் வாடிக்கையாளர் வாங்கிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Amazon.ae -ன் மிகப்பெரிய தள்ளுபடி விற்பனையில் ஏழு நாட்களுக்கு, தாங்கள் வாங்கும் பொருட்களுக்கு வாடிக்கையாளர்கள் 70 சதவீதம் வரை தள்ளுபடி பெறலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஏழு நாள் சிறப்பு தள்ளுபடி விற்பனையில் அமேசான் வாடிக்கையாளர்கள் எலக்ட்ரானிக்ஸ், பேஷன், ஸ்போர்ட்ஸ், பியூட்டி, கிச்சன், ஹோம் போன்ற பல்வேறு வகையான பொருட்களுக்கு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், இந்த தள்ளுபடியானது டாப் ப்ராண்டுகளாக இருக்கும் Bose, Samsung, Sony, Nutricook , PowerMax Fitness, Dyson, Black+Decker, Michael Kors, Guess, adidas, Under Armour, L’Oreal Paris, Maybelline ஆகியவற்றையும் உள்ளடக்குகிறது.
இந்த Black Friday விற்பனைகளுக்காக எமிரேட்ஸ் NBD, எமிரேட்ஸ் இஸ்லாமிக் வங்கி மற்றும் LIV கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தகுதி வாய்ந்த ஆர்டர்களில் 75 திர்ஹம் வரை கூடுதலாக 15 சதவீத தள்ளுபடி பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
Noon
அதே போன்று, ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்றொரு சில்லறை விற்பனை நிறுவனமான noon.com-ன் Yellow Friday விற்பனையும் இன்று (நவம்பர் 23) முதல் தொடங்கி நவம்பர் 29 நள்ளிரவில் முடிவடைகிறது என்றும், இது வாடிக்கையாளர்களுக்கு அனைத்து வகைகளிலும் 80 சதவீதம் வரை தள்ளுபடி, விலை குறைப்புகள், தினசரி சர்ப்ரைஸ் போன்றவற்றை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில், noon -ன் yellow friday விற்பனையானது மற்ற அனைத்து வெள்ளிக்கிழமை விற்பனையையும் விட மிக அதிக விற்பனையை தந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lulu
ஐக்கிய அரபு அமீரகத்தின் முன்னணி சில்லறை விற்பனை நிறுவனமான Lulu-வின் சூப்பர் வெள்ளி விற்பனை (super friday sale) இன்று (நவம்பர் 23) தொடங்கி டிசம்பர் 5 ஆம் தேதி வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்களுக்கு 70 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், மாஸ்டர்கார்டின் மூலமாக ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது கூடுதலாக 20 சதவீத தள்ளுபடியை வழங்குகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மொத்தமாக 90 சதவீத தள்ளுபடி பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Sharaf DG
துபாயை தளமாகக் கொண்ட எலக்ட்ரானிக்ஸ் சில்லறை விற்பனை நிறுவனமான ஷரஃப் டிஜி (Sharaf DG) நிறுவனம், DG Friday Sale எனும் தள்ளுபடி விற்பனையை தொடங்கியுள்ளது. இதில் வாடிக்கையாளர்கள் telecom, laptops, home and lifestyle products போன்றவற்றில் 75 சதவீதம் தள்ளுபடி பெறலாம் என்று தெரிவித்துள்ளது. கிரெடிட் கார்டுகளில் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Carrefour
மற்றொரு பெரிய ஐக்கிய அரபு அமீரக சில்லறை விற்பனையாளரான கேரிஃபோர் இன்று (நவம்பர் 23) முதல் டிசம்பர் 5 வரை மளிகைப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடியை வழங்க உள்ளது. அதனை தவிர்த்து, நிறுவனம் பல வகையான தயாரிப்பு பொருட்களை குறைந்த விலையில் சிறந்த விலைக்கு விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.