ADVERTISEMENT

தண்ணீர் மற்றும் மின்சாரத்திற்கான கட்டணத்தைக் குறைத்த DEWA..!!

Published: 29 Nov 2020, 2:05 PM |
Updated: 29 Nov 2020, 2:19 PM |
Posted By: admin

துபாய் மின்சாரம் மற்றும் நீர் ஆணையம் (Dubai Electricity and Water Authority),  மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான பயன்பாட்டு கட்டணத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

மின்சாரத்திற்கான கட்டணம் ஒரு கிலோ வாட் மணி நேரத்திற்கு 6.5 ஃபில்களில் (fils) இருந்து 5 ஃபில்களாக (fils) குறைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், தண்ணீருக்கான கட்டணம் கலோன் (gallon) ஒன்றுக்கு 0.6 ஃபில்களுக்கு பதிலாக 0.4 ஃபில்களாக குறைக்கப்பட்டிருப்பதாக DEWA தெரிவித்துள்ளது.

துபாயின் எரிசக்தி கலவையில் புதுப்பிக்கத்தக்க மற்றும் தூய்மையான ஆற்றலின் பங்கை அதிகரிக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் உத்தரவின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த கட்டணக் குறைப்பானது வரும் டிசம்பர் 1 ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது

 

ADVERTISEMENT