ஒவ்வொரு ஆண்டும் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் பல்வேறு வகையான பொருட்கள் விற்பனையில் மிகப்பெரிய தள்ளுபடியை அளிக்கும் துபாய், இந்த வருடத்தின் இறுதியாக 3 நாள் சூப்பர் விற்பனையை மீண்டும் கொண்டு வருகிறது. இந்த ஆண்டின் மெகா விளம்பரத்தின் இறுதி பதிப்பாக நவம்பர் 26 முதல் 28 வரை மால்கள் மற்றும் வணிக மையங்களில் நடைபெறும் சூப்பர் விற்பனையில், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் நகரத்தின் பல்வேறு வகையான வாழ்க்கை முறை, அழகு, பேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் பல பொருட்களின் விற்பனையில் 90 சதவீத விலை குறைப்பை அனுபவிக்க உள்ளனர்.
துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சின் இறுதி வாரத்தின் இறுதியில் நடைபெற உள்ள இந்த மூன்று நாள் சூப்பர் விற்பனையில் பெரிய பிராண்டுகள் மற்றும் உள்நாட்டு சில்லறை விற்பனையாளர்கள் பங்கேற்கவுள்ளனர். இதன் மூலம் சுமார் 1,500 க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள் மற்றும் கடைகளில் குறிப்பிட்ட பொருட்களின் விலைகள் 90 சதவீத அளவில் வீழ்ச்சியடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த மூன்று நாள் தள்ளுபடி விற்பனையில் நகரத்தின் அனைத்து கடைகள், மால்கள் மற்றும் ஷாப்பிங் இடங்கள் அங்கு பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கண்டிப்பாக கடைபிடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.