ADVERTISEMENT

துபாயில் புதிதாக வந்திறங்கிய 50 மெட்ரோ ரயில்கள்..!! மெட்ரோ பயணத்தை இன்னும் மெருகூட்ட பல புதிய மாற்றங்கள் அறிமுகம்..!!

Published: 7 Nov 2020, 1:49 PM |
Updated: 7 Nov 2020, 1:49 PM |
Posted By: admin

துபாயில் மெட்ரோவில் பயணிக்கும் பயணிகளுக்கு இன்னும் வசதியான பயணத்தை வழங்குவதற்கு துபாய் மெட்ரோவில் 50 புத்தம் புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுப் போக்குவரத்துத் தலைவர் இன்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளார். இவற்றில் பதினைந்து ரயில்கள் எக்ஸ்போ-2020 க்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 35 ரயில்கள் தற்போதுள்ள துபாய் மெட்ரோவின் சேவையின் அளவை மேம்படுத்துவதற்காக திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இது குறித்து சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) நிர்வாக இயக்குநர்கள் குழுவின் தலைவர் டைரக்டர் ஜெனரல் மட்டார் முகமது அல் தாயர் அவர்கள் கூறுகையில், “மெட்ரோ ரயில்களின் உட்புறங்களில் இன்னும் விசாலமானதாக மாற்றுவதற்காக ‘விரிவான மேம்பாடுகள்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும், இந்த புதிய வடிவமைப்பில் இருக்கைகள் மறுபகிர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு ரயிலின் திறனையும் எட்டு சதவீதம் அதிகரித்து, 643 பயணிகள் முதல் 696 பயணிகள் வரை பயணம் செய்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அல் தாயர் மேலும் தெரிவித்தார்.

அதே போன்று நிற்கும் பயணிகளுக்கான இடத்தை விரிவுபடுத்துவதற்காக லக்கேஜ் பெட்டியின் வடிவமைப்பும் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதனை தொடர்ந்து, “பிற புதிய மேம்பாடுகளில் புதிய டிசைன்களில் கிராப் ஹேண்டில்கள் மற்றும் லைட்டிங் (grab handles and lighting) மற்றும் புதிய டிஜிட்டல் விளம்பர காட்சிகளின் பயன்பாடு ஆகியவை அடங்கும். மெட்ரோ பாதை மற்றும் நிலையங்களைக் குறிக்க ஒரு ஒளிரும் டைனமிக் லைன் வரைபடம் (illuminated dynamic line map) பயன்படுத்தப்படும், மேலும் விளக்குகள் LED மின் சேமிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ”என்று அவர் விளக்கினார்.

வண்டிகளை மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடியதற்கு ஏதுவாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் மெட்ரோவின் வெளிப்புற வடிவம் அதன் வடிவமைப்பு அடையாளத்தை பராமரிக்க அதே வடிவத்திலேயே அமைக்கப்பட்டிருப்பதாகவும் அல் தாயர் கூறியுள்ளார்.

புதிய ரயில்கள் அல் ரஷீதியா மற்றும் ஜபெல் அலி ஆகிய துபாய் மெட்ரோ டிப்போக்களில் நிறுத்தப்பட்டுள்ளன என்றும், RTA தற்போது துபாய் மெட்ரோ ரெட் லைன் பாதை 2020 இல் ரயில்களின் செயல்பாட்டு சோதனைகளை நடத்தி வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.