ADVERTISEMENT

ஒரே காரில் 37,676 LED விளக்குகளை வைத்து கின்னஸ் சாதனை படைத்த குளோபல் வில்லேஜ்..!!

Published: 12 Nov 2020, 12:38 PM |
Updated: 12 Nov 2020, 12:44 PM |
Posted By: admin

உலக நாடுகள் அனைத்தையுமே அச்சு பிசகாமல் அந்தந்த நாடுகளின் உடை, கலாச்சாரம், உணவு வகைகள் என அப்படியே நம் கண் முன்னே கொண்டு வருவது துபாயின் குளோபல் வில்லேஜ். வண்ண விளக்குகள், பல்வேறு நாட்டினத்தவர்கள், அவர்களின் நடனம், வான வேடிக்கை, குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு என பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு காண்போர் மனத்தைக் கவர்ந்திழுக்கும் குளோபல் வில்லேஜ் வெற்றிகரமாக தனது 25-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. 25 வது ஆண்டின் வெள்ளி விழா கொண்டாட்டமானது மிகவும் கோலாகலமாகவும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வண்ணமும் இருக்கும் என்பதை ஏற்கெனவே நிர்வாகம் அறிவித்திருந்தது.

ADVERTISEMENT

மேலும், 25 வது வெள்ளி விழாவினை முன்னிட்டு குளோபல் வில்லேஜ் 25 உலக சாதனை படைக்கும் என்று ஏற்கெனவே திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் முதலாவதாக ராக்கின் ’1000 குளோபல் கிக் (The Rockin’ 1000 Global Gig) எனப்படும் உலக வரலாற்றிலேயே முதன் முறையாக மிகப்பெரிய பிரமாண்டமான முறையில் ராக் இசை நிகழ்ச்சி நடந்தது. இதில் 80 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இந்நிலையில், குளோபல் வில்லேஜ் தொடங்கி இரண்டு வாரங்களில் தனது இரண்டாவது கின்னஸ் பட்டத்தை வென்றுள்ளது. இதில் ஒரு காரில் இதுவரை யாரும் வைத்திராத அளவுக்கு அதிக LED விளக்குகள் வைக்கப்பட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 37,676 LED விளக்குகளைத் தன்னுள் கொண்டிருக்கும் இந்த வாகனம் கடந்த சீசனின் ‘ஸ்டண்ட் ஷோ சர்வைவர்’ (Stunt Show Survivor) இன் ஒரு பகுதியாக இருந்தது. இப்போது, ​​இந்த வாகனம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

ADVERTISEMENT

 

View this post on Instagram

 

A post shared by Global Village القرية العالمية (@globalvillageuae) on

தற்பொழுது இரு சாதனைகள் முடிந்து இன்னும் 23 சாதனைகளை இந்த சீசனில் படைக்க தயாராகிக் கொண்டிருக்கிறது துபாயின் பன்முக கலாச்சார சந்தை மற்றும் பொழுதுபோக்கு இலக்கான குளோபல் வில்லேஜ்.