ADVERTISEMENT

காலாவதியான விசிட், ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்கள் நவம்பர் 30-க்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்..!! குவைத் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!!

Published: 10 Nov 2020, 8:39 AM |
Updated: 10 Nov 2020, 8:49 AM |
Posted By: admin

குவைத்தில் காலாவதியான விசிட் மற்றும் ரெசிடென்சி விசா வைத்திருக்கும் நபர்கள் இம்மாத இறுதிக்குள் (நவம்பர் 30) தங்களின் விசாவினை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று குவைத்தில் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதாக அந்நாட்டின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், விதிகளை மீறி தொடர்ந்து தங்கியிருப்பர்வர்களுக்கு சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அரசு அறிவித்துள்ள இந்த காலக்கெடு முடிந்த பிறகு சட்ட ரீதியிலான நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என்றும், மீறுபவர்கள் குவைத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு அவர்கள் மீண்டும் குவைத் திரும்புவதற்கு தடை விதிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த மாத இறுதிக்குள் அமைச்சின் வலைத்தளம் மூலமாகவோ அல்லது ரெசிடென்ஸ் விவகாரத் துறைகள் மூலமாகவோ தங்கள் ஊழியர்களின் நிலையைத் திருத்துமாறும் அமைச்சகம் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

குவைத் அரசாங்கமானது ஏற்கெனவே காலாவதியான ரெசிடென்ஸ் மற்றும் விசிட் விசாக்களின் செல்லுபடியை செப்டம்பர் 1 முதல் அடுத்த மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்திருந்தது. கொரோனா தொற்றுநோயின் காரணமாக உலகம் முழுவதிலும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் குவைத் அரசானது கடந்த மார்ச் முதல் மே வரை என மூன்று மாத காலத்திற்கு விசாவின் செல்லுபடிக்காலத்தை இலவசமாக நீட்டித்து. அந்த நீட்டிப்பை ஜூன் 1 முதல் ஆகஸ்ட் 31 வரை இரண்டாவதாகவும் தற்பொழுது மூன்றாவது முறையாகவும் நீட்டித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT