ADVERTISEMENT

துபாய்: இன்ஜினியர் உட்பட பல துறைகளை சேர்ந்த வல்லுநர்களுக்கும் 10 ஆண்டு கோல்டன் விசா..!! துபாய் ஆட்சியாளர் அறிவிப்பு..!!

Published: 15 Nov 2020, 11:33 AM |
Updated: 15 Nov 2020, 12:58 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை), அதிக துறைகளை சேர்ந்த நிபுணர்களுக்கு 10 ஆண்டு கோல்டன் விசாக்களை வழங்க ஒப்புதல் அளித்ததாக தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

ட்விட்டரில் இது குறித்து வெளியிட்ட செய்தியில். Phd பெற்றவர்கள், அனைத்து மருத்துவர்கள், கணினித் துறைகள், எலக்ட்ரானிக்ஸ், புரோகிராமிங், எலக்ட்ரிக்கல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆக்டிவ் டெக்னாலஜி ஆகிய துறைகளில் நிபுணத்துவம் பெற்ற அனைத்து பொறியியலாளர்களும் இந்த புதிய கோல்டன் விசாக்களைப் பெறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய அரபு அமீரகம் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் அதிக மதிப்பெண்கள் (3.8 அல்லது அதற்கு மேற்பட்டவை) பெறும் நபர்களுக்கும் இந்த கோல்டன் விசாக்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

“செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), பெரிய தரவு (big data) மற்றும் வைரஸ் தொற்றுநோயியல் (Viral epidemiology) ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற பட்டதாரிகளுக்கும் இந்த விசாக்கள் வழங்கப்படும்” என்று ஷேக் முகமது அவர்கள் பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT