ஓமானில் பணிபுரியும் ஓமனி அல்லாத வெளிநாட்டவர்களின் பணி ஒப்பந்தத்தை பதிவு செய்ய தொழிலாளர் அமைச்சகம் புதிய மின்னணு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவையின் கீழ், ஊழியர்கள் தங்கள் நிறுவனத்தால் பதிவுசெய்யப்பட்ட ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்து ஒப்புதல் அளிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளை சேர்ந்த தொழிலாளிகள் ஓமான் வந்தடைந்து, அவருக்கு ரெசிடென்ஸ் அட்டை வழங்கப்பட்டவுடன், புதிய சேவையில் துவங்கப்பட்டிருக்கும் மின்னணு போர்டல் மூலம் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கான பணி ஒப்பந்தங்களை பதிவு செய்யலாம் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே போல் பணி அனுமதி புதுப்பிக்கப்பட்டு, ரெசிடென்ஸ் அட்டை வழங்கப்பட்ட பின்னரும் அல்லது சேவையை மாற்றி அட்டை வழங்கப்பட்ட பின்னரும் ஒப்பந்தத்தை பதிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது .
ஒப்பந்தத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாளரின் ப்ரோபஷனில் ஏதேனும் மாற்றம் செய்தாலோ அல்லது பனி ஒப்பந்தம் காலாவதியான பிறகு மீண்டும் அமைச்சகத்தின் போரட்டலில் பதிவு செய்யப்பட வேண்டும் என கூறியுள்ளது. மேலும் ஊழியர்களின் விவரங்களில் மாற்றங்கள் உட்பட ஒப்பந்தத்தை மாற்றியமைக்க முடியும் என்றும் தொழிலாளர் அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஒப்பந்தத்தின் துல்லியத்தை உறுதிப்படுத்த, ஊழியர் (இரண்டாம் தரப்பு) PKI- எனும் இயக்கப்பட்ட அடையாள அட்டை அல்லது மொபைல் எண்ணைப் பயன்படுத்தி தனிநபர்களின் சேவைகளில் பணி சேவையின் ஒப்பந்தத்தை ஆய்வு செய்து கொள்ளலாம் எனவும், ஊழியரின் ஒப்புதல் கிடைத்தவுடன், நிறுவனங்கள் தங்களின் PKI யைப் பயன்படுத்தி மீண்டும் அந்த போர்டல் மூலம் பணி ஒப்பந்த சேவைக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அதனை தொடர்ந்து பணி ஒப்பந்த விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு ஒரு பணி ஒப்பந்தம் உருவாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
2021 முதல் ஆட்சேபனை இல்லா சான்றிதழ் (NOC) விதியை அகற்ற அரசாங்கம் முடிவு செய்திருப்பதால், நிறுவனங்களுக்கு போதுமான பாதுகாப்பை அளிப்பதற்கும் ஓமான் அரசு உறுதியளித்திருந்தது. சமீபத்தில் பட்டியலிடப்பட்ட விவரங்களின்படி, விதியைச் செயல்படுத்த ஆறு மாத கால அவகாசம் வழங்குவதைத் தவிர, அரசின் இந்த புதிய முடிவு நிறுவனங்களுக்கு வேலை ஒப்பந்தத்தில் பரஸ்பர நன்மை பயக்கும் உட்பிரிவுகளைக் கொண்டிருக்க அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் ஒரு தொழிலாளி தான் பணிபுரியும் நிறுவனத்தை விட்டு வேறொரு நிறுவனம் அல்லது வணிக உரிமையாளருடன் பனிபுரிய ஒப்பந்தம் போடப்பட்டாலும், அவர் பணிபுரிந்த நிறுவனத்தின் பணி இரகசியங்களை பாதுகாக்க அந்த நிறுவனம் தனது தொழிலாளியுடன் சட்டப்பூர்வ ஒப்பந்தத்தை வைய்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர் எனவும் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.