ADVERTISEMENT

ஓமான் தேசிய தினத்தை முன்னிட்டு 390 கைதிகளுக்கு மன்னிப்பு அளித்த ஓமான் சுல்தான்..!!

Published: 17 Nov 2020, 3:46 PM |
Updated: 17 Nov 2020, 3:56 PM |
Posted By: admin

ஓமானில் 50 வது தேசிய தினத்தை முன்னிட்டு, நாட்டில் உள்ள பல சிறைக் கைதிகளுக்கு ஓமான் சுல்தான் மாண்புமிகு ஹைதம் பின் தாரிக் அவர்கள் சிறப்பு மன்னிப்பு வழங்கியுள்ளார்.

ADVERTISEMENT

இந்த செய்தி குறித்து ராயல் ஓமான் காவல்துறை (ROP) ஆன்லைனில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, ஓமானின் உச்ச கட்டளைத் தளபதியான சுல்தான் ஹைதம் பின் தாரிக் அவர்கள், பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்ற சிறைக் கைதிகள் குழுவுக்கு சிறப்பு மன்னிப்பு அளிக்கிறார். மன்னிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 390 பேர் என்று அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இவர்களுள் 150 கைதிகள் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் என்று ராயல் ஓமான் காவல்துறையின் அதிகாரப்பூர்வ வட்டாரம் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT