ADVERTISEMENT

அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு ஊழியர்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு..!!

Published: 22 Nov 2020, 9:25 AM |
Updated: 22 Nov 2020, 9:25 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் மனிதவள மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, அமீரகத்தில் 49-வது தேசிய தினம் மற்றும் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு ஊழியர்களுக்கு டிசம்பர் 1 செவ்வாய்க்கிழமை முதல் டிசம்பர் 3 வியாழக்கிழமை வரை பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

அதனை தொடர்ந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமை வருவதால் டிசம்பர் 6 ஞாயிற்றுக்கிழமை முதல் அரசுத்துறை ஊழியர்கள் பணிகள் மீண்டும் திரும்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசு துறை ஊழியர்களுக்கு தொடர்ச்சியான ஐந்து நாட்கள் பொது விடுமுறையானது கிடைக்கவிருக்கின்றது.

சனிக்கிழமை வேலை நாட்களாக இருக்கும் தனியார் துறை நிறுவனங்களாக இருந்தால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 


 

ADVERTISEMENT