ADVERTISEMENT

அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதற்கு அமீரக தலைவர்கள் வாழ்த்து..!!

Published: 8 Nov 2020, 8:38 AM |
Updated: 8 Nov 2020, 8:40 AM |
Posted By: admin

அமெரிக்க தேர்தலில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதற்கு ஐக்கிய அரபு அமீரக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT

சனிக்கிழமை இரவு அமெரிக்க தேர்தல் முடிவு வெளியானதை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் மற்றும் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு தனது சமூக ஊடக பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.

ADVERTISEMENT

அதே போல், அபுதாபியின் மகுட இளவரசரும், ஐக்கிய அரபு அமீரக ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதியுமான மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களும், ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகிய இருவரும் அமெரிக்க தேர்தலில் வெற்றி அடைந்ததற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் மற்றும் அமெரிக்க மக்களின் செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கான வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா இடையே ஒரு வலுவான வரலாற்று சிறப்பு மிக்க நட்புறவு உள்ளது என்றும், அது மேலும் வலுவடையும் என்பதை எதிர்பார்ப்பதாகவும் இரு தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.