ADVERTISEMENT

அமீரகத்தில் இடைவிடாது பெய்து வரும் மழை..!! கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம்..!!

Published: 21 Nov 2020, 2:06 PM |
Updated: 21 Nov 2020, 2:14 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த இரண்டு நாட்களாக ராஸ் அல் கைமா மற்றும் ஃபுஜைராவில் மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருவதால், அங்கிருக்கும் பள்ளத்தாக்குகள் மற்றும் மலைப்பகுதிகளில் மழைநீர் வெள்ளம் புகுந்துள்ளது.

ADVERTISEMENT

கனமழை காரணமாக தேங்கிய மழைநீரை வெளியேற்றுவதற்காக டேங்கர்களை நிறுத்தியுள்ளதாகவும், கன மழையின் காரணமாக சாய்ந்த மரங்கள் மற்றும் குப்பைகளை சாலைகளில் இருந்து அகற்றும் பணிகளும் தூய்மைப் பணியாளர்கள் உதவியுடன் முழு வீச்சுடன் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாலைகளில் வாகனங்கள் வழுக்குவதற்கு வாய்ப்புள்ளதாலும், சில நேரங்களில் வாகனம் ஓட்டும் போது காட்சித்திறன் (visibility) குறைவாக இருப்பதாலும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ராஸ் அல் கைமா மற்றும் ஃபுஜைராவின் அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் பள்ளத்தாக்குகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும் அவர்கள் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ADVERTISEMENT

தேசிய வானிலை மையம் (NCM) கூற்றுப் படி, ஞாயிற்றுக்கிழமை காலை வானிலையானது கடலோரப் பகுதிகளில் ஈரப்பதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது. அத்துடன் காற்று தென்கிழக்கில் இருந்து வடகிழக்கிற்கு மிதமானதாக வேகத்துடன் வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் காற்று, 15-25 கி.மீ வேகத்திலும், அதிகபட்சம் 30 கி.மீ வேகத்தில் வீசும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

நிலையற்ற வானிலை காரணமாக, போக்குவரத்து ஓட்டத்தை கட்டுப்படுத்த ராஸ் அல் கைமா மற்றும் ஃபுஜைரா காவல்துறை அனைத்து சாலைகளிலும் ரோந்து பணிகளில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.