ADVERTISEMENT

அமீரகத்தில் 1.2 கி.மீ தூரத்திற்கு நடைபெற இருக்கும் பிரம்மாண்டமான புத்தாண்டு தின வான வேடிக்கை நிகழ்ச்சிகள்..!!

Published: 30 Dec 2020, 11:37 AM |
Updated: 30 Dec 2020, 11:39 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புத்தாண்டு தினத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளும் வான வேடிக்கைகளும் ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான அறிவிப்புகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதே போன்று, ஒவ்வொரு வருடமும் அபுதாபியின் கார்னிச் பகுதியில் புத்தாண்டு தினத்தையொட்டி சிறப்பு வான வேடிக்கைகள் நிகழ்த்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

ADVERTISEMENT

தற்பொழுது, வரவிருக்கும் புத்தாண்டிலும் அபுதாபி கார்னிச் பகுதியில் 1.2 கி.மீ தூரத்திற்கு வியத்தகு வானவேடிக்கைகள் நிகழ்த்தப்பட இருப்பதாக அபுதாபியின் கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வான வேடிக்கைகள் ஐந்து நிமிடங்கள் நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபுதாபியில் கார்னிச் பகுதியில் மட்டுமல்லாது யாஸ் ஐலாண்ட் மற்றும் அல் வத்பாவில் உள்ள ஷேக் சையத் ஹெரிடேஜ் ஃபெஸ்டிவல் ஆகிய இடங்களிலும் புத்தாண்டு தின வான வேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT