புத்தாண்டைக் குறிக்கும் விதமாகவும், பொதுமக்களின் விருப்பங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் பதிலளிக்கும் விதமாகவும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ராஸ் அல் கைமா காவல் துறை 50 சதவீத போக்குவரத்து அபராதம் தள்ளுபடி திட்டத்தை ஜனவரி 3,2021 வரை நீட்டிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த 50 சதவீத போக்குவரத்து அபராதத் தள்ளுபடி திட்டமான ஐக்கிய அரபு அமீரகத்தின் 49 வது தேசிய தினத்தை முன்னிட்டு கடந்த டிசம்பர் 2 முதல் 8 வரை என ஒரு வாரத்திற்கு அறிவித்தது. பின்னர் இந்த திட்டத்தை டிசம்பர் 23 வரை நீட்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்பொழுது இரண்டாவது முறையாக இத்திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த போக்குவரத்து அபராதத்திற்கான தள்ளுபடி திட்டம் நீட்டிக்கப்பட்டதை தொடர்ந்து, அபராதம் செலுத்த வேண்டிய நபர்கள் இதனை பயன்படுத்திக்கொண்டு ஜனவரி 3 குல அபராதம் செலுத்தி பலனடையுமாறு ராஸ் அல் கைமா காவல்துறை வலியுறுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையானது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதற்கும் அவர்களின் நிதிச் சுமைகளைக் குறைப்பதற்கும் நோக்கமாக கொண்டு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகளின் கரும்புள்ளிகள் ரத்து செய்யப்படும் என்றும், மேலும் வாகனத் தண்டனையின் அபராதமும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த அபராதத் தள்ளுபடியானது வாகனங்களை வேகமாக ஓட்டுவதால் ரேடாரில் பதிவாகும் அபராதம் மற்றும் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் (Vehicle Impoundments) போன்ற அனைத்து அபராதங்களையும் உள்ளடக்கியது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் தங்களின் அபராதங்களை MOI ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் மூலம் செலுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் சிறையில் வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு, வாகன ஓட்டிகள் போக்குவரத்து மற்றும் உரிம சேவை மையம் மற்றும் அல் சாதி பகுதியில் உள்ள வாகன இம்பவுண்ட்மென்ட் வளாகத்தைப் பார்வையிட வேண்டும் (Traffic and Licensing Services Centre and the Vehicle Impoundment Complex) என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.