ADVERTISEMENT

UAE: தொலைபேசி வாயிலாக ஒருவர் மற்றொரு நபரை அவமதிப்பு செய்தால் 5000 திர்ஹம் அபராதம்..!! வெளியான புதிய சட்டம்..!!

Published: 12 Dec 2020, 3:14 PM |
Updated: 12 Dec 2020, 3:16 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் தொலைபேசி அழைப்பின் மூலமாகவோ அல்லது மெசேஜ் மூலமாகவோ ஒருவர் மற்றொருவரை அவமதிப்பு அல்லது அவதூறு செய்ததாக குற்றம் சாற்றப்பட்டால் அவருக்கு 5,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும் என்று ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டாட்சி பொது வழக்கு ஆணையம் தற்பொழுது அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

கூட்டாட்சி பொது வழக்கு ஆணையம் தனது சமூக ஊடக கணக்கில் வெளியிட்ட அறிவிப்பில், “கூட்டாட்சி தண்டனைச் சட்டத்தின் 374 வது பிரிவின்படி, தொலைபேசி மூலமாகவோ அல்லது மற்றவர்களின் முன்னிலையிலோ ஒரு நபர் மற்றொரு நபரை அவதூறு அல்லது அவமதிப்பு செய்தால் அந்நபருக்கு 5000 திர்ஹமுக்கு மிகாமல் அபராதம் அல்லது 6 மாதத்திற்கு மிகாமல் சிறை தண்டனை விதிக்கப்படும். மூன்றாம் தரப்பின்னர் முன்னிலையில்லாமல் ஒரு நபர் மற்றொரு நபரை அவமதிப்பு செய்தால் அவருக்கு 5000 திர்ஹமுக்கு மிகாமல் அபராதம் விதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

சமூகத்தின் உறுப்பினர்களிடையே சட்ட கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கும், சட்டங்களை அறியாமையால் ஏற்படும் மீறல்களைக் குறைப்பதையும் சட்டங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக அமீரக செய்தி நிறுவனம் (WAM) தெரிவித்துள்ளது.

அதேபோல், ஒரு பொது ஊழியர் அல்லது ஒரு பொது சேவைக்கு பொறுப்பான நபர் தனது கடமைகளைச் செய்யும்போது அவமதிக்கப்பட்டால் இதே போன்ற அபராதங்கள் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT