உலகளவில் அதிகளவு விமானங்களின் சேவைகளை எதிர்கொள்ளும் ஒரு விமான நிலையமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் சர்வதேச விமான நிலையம் இருக்கின்றது. கொரோனாவின் பாதிப்பால் விமான சேவைகள் கடந்த சில மாதங்களுக்கு முன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தாலும், தற்பொழுது படிப்படியாக மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், வரும் ஜனவரி 1 முதல் 7 வரையிலான நாட்களில் துபாய் சர்வதேச விமான நிலையமானது அதிகளவிலான பயணிகளை எதிர்கொள்ளும் என்று கூறப்படுகிறது.
ஜனவரி 1-7 முதல் சுமார் 545,000 வாடிக்கையாளர்கள் துபாய் விமான நிலையம் வழியாக பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், குறிப்பாக ஜனவரி 2 மற்றும் 3 ஆகியவை வாரத்தின் மிகவும் அதிக பயணிகளை எதிர்கொண்டு வாரத்தின் பரபரப்பான நாட்களாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.
அதனை தொடர்ந்து, துபாய் சர்வதேச விமான நிலையம் வரும் பயணிகளுக்கான வழிகாட்டுதல்களை, விமான நிலையம் அறிவித்துள்ளது. இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவது விரைவான மற்றும் எளிதான பயணத்தை உறுதி செய்யும் என்று விமான நிலையம் கூறியுள்ளது.
வழிகாட்டுதல்கள்:
- நீங்கள் பயணிக்கவிருக்கும் விமான நிலையத்தின் டெர்மினல் பகுதி உட்பட உங்கள் பயணத்திற்கான குறிப்பிட்ட பயணத் தேவைகள் குறித்த தகவல்களை உங்கள் விமான நிறுவனத்துடன் சரிபார்த்துக் கொள்ள வேண்டும்
- பயணத்திற்கு முன் உங்கள் கொரோனாவிற்கான PCR சோதனையின் எதிர்மறை முடிவை குறிக்கும் சான்றிதழை ஆங்கிலம் அல்லது அரபி மொழியில் வைத்திருக்க வேண்டும்
- எப்பொழுதும் முக கவசம் அணிந்து, விமான நிலையத்தில் எல்லா நேரங்களிலும் உடல் ரீதியான சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
- உங்களுக்கு கொரோனாவிற்கான அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால், பயணம் செய்வதைத் தவிர்த்து கொண்டு அதற்கு பதிலாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள்
- பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட அனைத்து பயண ஆவணங்களும் விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் உரிய செல்லுபடி காலத்தைக் கொண்டிருப்பதை உறுதி செய்து கொள்ளவும்
- விமான டிக்கெட் வைத்திருப்பவர்கள் மட்டுமே விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். எனவே உறவினர்கள் மற்றும் நண்பர்களை விமான நிலையத்திற்கு வரவழைத்து சிரமத்திற்கு ஆளாக்காமல் அதற்கு முன்னரே விடை பெற்றுக்கொள்ள வேண்டும்.
It’s a busy time here at DXB! From January 1-7 we are expecting around 545,000 customers to travel through the airport, with January 2 and 3 set to be the busiest days of the week. Please follow these simple steps to ensure a quick and easy journey. pic.twitter.com/Kfy3BF428A
— Dubai International (@DXB) December 31, 2020