துபாய் அரசின் டிஜிட்டல் பேமெண்ட் (Digital Payment) முறைகளை அதிகரிப்பதற்கும், பணமில்லா பொருளாதாரத்தை (cashless economy) நோக்கிய மாற்றத்தை துரிதப்படுத்துவதற்கும் துபாய் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை ஆதரிக்கும் விதமாக, துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) பணமில்லா சமூகத்தை நோக்கி நகர்வதற்கான சமீபத்திய நிறுவனமாக மாறியுள்ளது.
இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக தற்பொழுது RTA மற்றும் ஹுவாய் நுகர்வோர் வணிகக் குழு (Huawei Consumer Business Group) ஆகியவை ஒன்றிணைந்து GCC-யின் முதல் டிஜிட்டல் nol கார்டுகள் (digital nol cards) மற்றும் நோல் பே மொபைல் அப்ளிகேஷனை (nol Pay mobile app) ஹுவாய் ஆப் கேலரியில் (Huawei AppGallery) அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளன.
இந்த நோல் பே அப்ளிகேஷன் மூலம் துபாய் மெட்ரோ முதல் வாட்டர்பஸ், டிராம் உள்ளிட்ட RTA வின் அனைத்து போக்குவரத்து சேவைகளுக்குமான டிக்கெட்டினை வாங்கிக்கொள்ளலாம் என்றும், மேலும் தங்கள் டிஜிட்டல் நோல் கார்டுகளை (digital nol cards) மொபைல் அப்ளிகேஷன் மூலம் நேரடியாக ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து RTA வின் கார்ப்பரேட் தொழில்நுட்ப ஆதரவு சேவைகள் துறையின் தலைமை நிர்வாக அதிகாரி முகமது அல் முத்தரெப் அவர்கள் கூறுகையில், “ஹுவாய் வாலெட்டுடன் (Huawei Wallet) இணைந்து அறிமுகப்படுத்தப்படும் புதிய RTA நோல் பே அப்ளிகேஷன் மூலம் அமீரகத்தில் வசிப்பவர்கள் தங்கள் பொதுப் போக்குவரத்து பயணங்களுக்கும் நோல் கார்டு தேவைப்படும் வேறு எந்த இடத்திலும் விரைவாக ஹுவாய் ஸ்மார்ட் போன்களின் மூலம் பணம் செலுத்திக்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் நேரடியாக ஹூவாய் ஆப் கேலரியில் இருந்து அப்ளிகேஷனை டவுன்லோடு செய்து, தங்களுக்கான ஐடியை உருவாக்கி, உடனடியாக சேவையைப் பயன்படுத்தி தங்கள் டிஜிட்டல் நோல் கார்டுகளை ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்” என்றும் கூறியுள்ளார்.