வாகன உரிமையாளர்கள் தங்களின் வாகனங்களை வாங்கும் போது வழங்கப்படும் பிளேட் எண்ணில் (Plate Numbers) தங்களுக்கு பிடித்தமான எண்ணை கூடுதல் விலை குடுத்து வாங்கும் பழக்கம் உலகம் முழுவதிலுமே நடைமுறையில் இருக்கின்றது. அதிலும் fancy numbers என கூறப்படும் குறிப்பிட்ட சில எண்களை பெறுவதற்கு மிக அதிக பணம் வாகன உரிமையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்.
அத்தகைய பிளேட் எண்களை வாங்குவதற்கான ஏலமானது துபாயில் சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. அப்பொழுது நடைபெற்ற ஏலத்தில் மிக அதிக பட்ச விலையாக 3.8 மில்லியன் திர்ஹமிற்கு வாகன fancy number-ஆன R 13 விற்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 2.42 மில்லியன் திர்ஹமிற்கு W 69 என்ற எண்ணும், 1.9 மில்லியனுக்கு AA 18 என்ற பிளேட் எண்ணும் , 1.8 மில்லியன் திர்ஹமிற்கு O 55555 என்ற எண்ணும் விற்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற இந்த ஏலத்தில் மொத்தமாக 31.55 மில்லியன் திர்ஹம்களுக்கு வாகன பிளேட் எண் விற்கப்பட்டுள்ளதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளது
RTA இந்த ஏலத்தில் ஏலம் எடுக்க மொத்தம் 90 fancy எண்களை அறிவித்ததாகவும் இந்த எண்களில் இரண்டு, மூன்று, நான்கு மற்றும் ஐந்து இலக்க வாகன பிளேட் எண்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.