ADVERTISEMENT

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு..!! சவூதி சுகாதார அமைச்சகம் தகவல்..!!

Published: 24 Dec 2020, 8:49 AM |
Updated: 24 Dec 2020, 9:15 AM |
Posted By: admin

கொரோனாவின் பாதிப்பானது ஒரு வருடம் முடிந்தும் தீராத நிலையில், தற்பொழுது கொரோனாவிற்கான தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்நிலையில், வளைகுடா நாடுகளில் ஒன்றான சவூதி அரேபியாவில் கொரோனா தடுப்பூசி பெற விரும்புபவர்கள் Sehaty என்ற அப்ளிகேஷனில் பதிவு செய்யுமாறு சவூதி அரசு கேட்டுக்கொண்டது.

ADVERTISEMENT

அதனை தொடர்ந்து தடுப்பூசி போட விரும்பி இதுவரை 500,000 க்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளதாக சுகாதார அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை தடுப்பூசிக்கான ரிஜிட்ரேஷன் தொடங்கப்பட்டதிலிருந்து தடுப்பூசி போட விருப்பம் தெறித்தவர்களின் எண்ணிக்கை 500,178 என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் செயல்திறன்மிக்கது என்றும் இந்த தடுப்பூசி செலுத்துவதன் மூலம் வலுவான நோயெதிர்ப்பு சக்தி மற்றும் தொடர்ச்சியான ஆன்டிபாடிகள் ஏற்படும் என்றும் அமைச்சகம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

 

ADVERTISEMENT