ADVERTISEMENT

UAE: கொரோனாவிற்கான PCR சோதனைக் கட்டணத்தை அதிரடியாகக் குறைத்த SEHA ..!!

Published: 5 Dec 2020, 2:15 PM |
Updated: 5 Dec 2020, 2:18 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவலின் ஆரம்பகட்டத்தில், கொரோனாவிற்கான PCR சோதனை மேற்கொள்வதற்காக மிகக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது நாம் அனைவரும் அறிந்ததே. தொடர்ந்து வந்த காலங்களில், PCR சோதனைக்கான கட்டணம் குறைக்கப்பட்டு வந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில், தற்பொழுது அபுதாபி சுகாதார சேவைகள் நிறுவனம் (SEHA) கொரோனாவிற்கான PCR சோதனைக் கட்டணத்தை ஏற்கெனவே இருந்த விலையை விட 50 சதவீத அளவிற்கும் மேல் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

SEHA சோதனை மையங்களில் கடந்த செப்டம்பர் மாதத்தில் PCR சோதனைக்கான கட்டணம் 370 திர்ஹமில் இருந்து 250 திர்ஹம்சாக குறைக்கப்பட்டது. அதே சமயத்தில் துபாய் சுகாதார ஆணையம் PCR சோதனைக்கான கட்டணத்தை 150 திர்ஹம்சாக குறைத்தது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது அனைத்து SEHA சோதனை மையங்களிலும் ஒரு PCR சோதனைக்கு 85 திர்ஹம்ஸ் கட்டணம் மட்டுமே செலவாகும் என்று இன்று (சனிக்கிழமை) அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விலைக்குறைப்பானது அனைத்து SEHA மையங்களிலும் உடனடியாக நடைமுறைக்கு வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

கடந்த நவம்பர் மாதம் முதல் அமீரகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபிக்கு வரும் குடியிருப்பாளர்கள் அபுதாபியில் தொடர்ந்து தங்கினால், அவர்கள் அபுதாபி வந்த 4 ம் மற்றும் 8 ம் நாளிலும் PCR சோதனை மேற்கொள்வது கட்டாயம் என அபுதாபி அரசு அறிவித்திருந்தது. இவ்வாறு மற்ற பகுதிகளில் இருந்து அபுதாபிக்கு வரும் குடியிருப்பாளர்களுக்கு இந்த விலை குறைப்பானது சற்று நிம்மதியை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT