ADVERTISEMENT

துபாய் புத்தாண்டு கொண்டாட்டம்: வாகன ஓட்டிகளுக்காக 16,700 கூடுதல் பார்க்கிங் இடங்கள்..!! புர்ஜ் கலீஃபா பகுதிக்கு அருகிலேயே RTA ஏற்பாடு..!!

Published: 31 Dec 2020, 10:53 AM |
Updated: 31 Dec 2020, 10:53 AM |
Posted By: admin

துபாயில் புத்தாண்டு தின கொண்டாட்டங்களை முன்னிட்டு இன்று மாலை 4 மணி முதல் மூடப்படும் புர்ஜ் கலீஃபாவைச் சுற்றியுள்ள சாலைகளின் பட்டியலை துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வெளியிட்டுள்ள நிலையில், புத்தாண்டு கொண்டாட்டத்தை காண்பதற்கு வரும் பார்வையார்கள் தங்களின் வாகனங்களை பார்க்கிங் செய்வதற்கு, அவர்களுக்காக கூடுதல் பார்க்கிங் இடங்களை RTA தற்பொழுது அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

RTA வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, புர்ஜ் கலீஃபா பகுதிக்கு அருகில் சுமார் 16,700 கூடுதல் பார்க்கிங் இடங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதாகவும், அங்கு வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை எளிதில் பார்க்கிங் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டிகள் புதிய ஜபீல் விரிவாக்கம் (Zabeel expansion) மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பார்க்கிங் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT