ADVERTISEMENT

அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு 49 GB இலவச மொபைல் டேட்டா வழங்கும் எடிசலாட்..!!

Published: 1 Dec 2020, 12:03 PM |
Updated: 1 Dec 2020, 12:03 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் 49 வது தேசிய தினத்தை முன்னிட்டு அமீரகத்தின் தொலைத்தொடர்பு நிறுவனமான எடிசலாட் தனது வாடிக்கையாளர்களுக்கு 49 GB இலவச மொபைல் டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனம் எடிசலாட் இந்த இலவச மொபைல் டேட்டாவை டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய இரண்டு நாட்களுக்கு வழங்க இருக்கிறது.

மேலும் எடிசலாட் அப்ளிகேஷனில் *49# என்று டயல் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பெறமுடியும் எனவும் எடிசலாட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT