ADVERTISEMENT

அமீரக தேசிய தினத்தை முன்னிட்டு அபுதாபி கார்னிச், அல் ரீம் ஐலேண்டில் வானவேடிக்கை..!! சமூக வலைதள பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு..!!

Published: 1 Dec 2020, 1:25 PM |
Updated: 1 Dec 2020, 1:29 PM |
Posted By: admin

அமீரகத்தின் தேசிய தினம் நாளை டிசம்பர் 2 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்படவிருப்பதை முன்னிட்டு அமீரகத்தின் தலைநகரான அபுதாபியிலும் வானவேடிக்கைகள் காட்சிப்படுத்தப்படும் என்று அபுதாபி ஊடக அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. டிசம்பர் 2 ஆம் தேதி (புதன்கிழமை) அன்று இரவு 9 மணிக்கு அல் ரீம் ஐலேண்ட் மற்றும் அல் வத்பாவில் வானவேடிக்கை நடைபெறும் எனவும் அதற்கடுத்ததாக அபுதாபி கார்னிச்சில் இரவு 9.25 மணிக்கு வானவேடிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனினும் அபுதாபியில் நடைபெறவிருக்கும் வானவேடிக்கை மற்றும் பிற நிகழ்வுகள் பார்வையாளர்களைக் கொண்டிருக்காது எனவும் ஆனால் அனைத்து குடியிருப்பாளர்களும் அபுதாபி கார்னிச்சில் இரவு 9.25 மணிக்கு நடைபெறும் வானவேடிக்கையை அபுதாபி டிவி மற்றும் எமராத் டிவியில் நிகழ்ச்சிகளை நேரடியாக காணலாம் என்றும் அதேபோன்று @UAE_BARQ எனும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் நேரடியாக நிகழ்வுகளை பார்க்கலாம் எனவும் அபுதாபி அரசு ஊடக அலுவலகம் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

அபூதாபியின் மற்ற இடங்களான அல் ரீம் ஐலேண்ட் மற்றும் அல் வத்பாவில் நடைபெறும் வானவேடிக்கைகளை அப்பகுதியில் வசிப்பவர்கள் தங்கள் இல்லங்களின் பால்கனிகளிலிருந்தோ அல்லது ஜன்னல்களிலிருந்தோ நிகழ்ச்சிகளைக் காணலாம் என்று கூறியுள்ளது.

ADVERTISEMENT

அதேபோன்று அல் அய்னின் ஜெபல் ஹபீத்தில் உள்ள அல் அய்ன் நகராட்சி கட்டிடத்தில் டிசம்பர் 1 முதல் 3 வரை தினமும் இரவு 8 மணிக்கு வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT