துபாயில் கொரோனாவிற்கு எதிராக செயல்படும் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசிகள் (Pfizer-BioNTech vaccine) பெல்ஜியம் நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்டு இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும், தடுப்பூசியினைப் போட்டுக்கொள்ள விரும்பும் துபாய் குடியிருப்பாளர்கள் அதற்காக முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் முன்பதிவு செய்ய வேண்டிய முறை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய்: Pfizier தடுப்பூசியை இலவசமாகப் போட்டுக்கொள்ள குடியிருப்பாளர்கள் முன்பதிவு செய்வது எப்படி???
இந்நிலையில், இந்த தடுப்பூசி குறித்த சில சந்தேகங்கள் அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு எழுந்துள்ளது. அவற்றில் சிலவற்றிற்கு பதிலளிக்கும் விதமாக துபாய் அரசு ஊடக அலுவலகம் மற்றும் துபாய் சுகாதார ஆணையம் ஆகியவை இணைந்து ஒரு வீடியோ பதிவை பகிர்ந்துள்ளன. அதில் இந்த தடுப்பூசியினை போட்டுக்கொள்ள முடியாதவர்கள் மற்றும் இந்த தடுப்பூசியினால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி எடுக்க முடியாத குடியிருப்பாளர்கள்
- 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள்
- கர்ப்பிணி பெண்கள்
- தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்
- கருத்தரிக்க முயற்சிக்கும் பெண்கள்
- நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு கொண்டவர்கள்.
- வேறு எந்த தடுப்பூசி, உணவு, பொருள், மருந்து அல்லது அட்ரினலின் ஆட்டோ இன்ஜெக்டர்களுக்கு (adrenaline auto injectors) ஒவ்வாமை உடையவர்கள்.
தடுப்பூசி போடுவதினால் ஏற்படும் பொதுவான பக்க விளைவுகள்
- சோர்வு
- தலைவலி
- காய்ச்சல்
- தடுப்பூசி செலுத்தப்பட்ட இடத்தில் வலி
எந்தெந்த சுகாதார மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது?
- சபீல் ஹெல்த் சென்டர் (Za’abeel Health Centre)
- அல் மிசார் ஹெல்த் சென்டர் (Al Mizhar Health Centre)
- நாத் அல் ஹம்மர் ஹெல்த் சென்டர் (Nad Al Hammar Health Centre)
- அல் பர்ஷா ஹெல்த் சென்டர் (Al Barsha Health Centre)
- அப்-டவுன் ஆக்குபேஷனல் ஹெல்த் ஸ்க்ரீனிங் சென்டர் (Up-town Occupational Health Screening Centre)
- ஹத்தா ஹாஸ்பிடல் (Hatta Hospital)
கொரோனா பாதித்து குணமடைந்தவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாமா?
கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர் கொரோனா பாதித்த நாளில் இருந்து மூன்று மாதங்கள் கழித்து தடுப்பூசியினை போட்டுக்கொள்ளலாம்.
தடுப்பூசிக்கான இரண்டாவது டோசினை சிறிது நாட்கள் தள்ளி போட்டுக்கொள்ளலாமா?
தடுப்பூசிக்கான இரண்டு டோஸினையும் குறிப்பிடப்பட்டிருக்கும் கால இடைவெளியில் கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசிக்கான முதல் டோசினை செலுத்திய பின்னர் இரண்டாவது டோஸ் 21 நாட்களுக்குப் பிறகு செலுத்தப்படும்.
Frequently asked questions and answers related to #Dubai‘s COVID- 19 vaccination campaign. @DHA_Dubai pic.twitter.com/sXNOqgAEuO
— Dubai Media Office (@DXBMediaOffice) December 23, 2020