ADVERTISEMENT

தொற்றுநோய் காலத்திலும் 18 மில்லியன் பயணிகளை எதிர்கொண்ட துபாய் விமான நிலையம்..!!

Published: 10 Jan 2021, 1:01 PM |
Updated: 10 Jan 2021, 1:10 PM |
Posted By: admin

கடந்த 2020 ம் ஆண்டு உலகமே தொற்றுநோய்க்கு எதிர்த்து போராடியதுடன் அனைத்து நாடுகளும் பல்வேறு பயணக்கட்டுப்பாடுகளையும் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கு தடையும் விதித்தன. இதனால் பெரும்பாலான விமான நிறுவனங்கள் கடந்த ஆண்டில் பெரும் நஷ்டத்தை சந்தித்தன.

ADVERTISEMENT

இத்தகைய கடுமையான சூழ்நிலையின் போதும், துபாய் விமான நிலையங்கள் வழியாக ஏறக்குறைய 18 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளதாக ரெசிடென்ஸ் மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் இயக்குநரகம் (GDRFA) வெளியிட்டிருக்கும் சமீபத்திய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

GDRFA வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின் படி, 2020 ஆம் ஆண்டில் துபாய் விமான நிலையம் வழியாக 17.88 மில்லியன் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 1.7 மில்லியன் பயணிகள் ஸ்மார்ட் கேட்ஸ் உபயோகப்படுத்தி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

GDRFA இது குறித்து தெரிவிக்கையில், “கொரோனாவினால் ஏற்பட்ட விதிவிலக்கான சூழ்நிலைகளை எதிர்கொள்ள GDRFA ஒரு ஸ்மார்ட் திட்டத்தை வகுத்துள்ளது. உலகளாவிய அமைப்பின் ஒருங்கிணைந்த பகுதியாக ஐக்கிய அரபு அமீரகம், கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான புதுமையான தீர்வுகளுடன் நெருக்கடியை சமாளித்தது” என்று குறிப்பிட்டுள்ளது.

GDRFA துபாயின் பொது இயக்குனர் மேஜர் ஜெனரல் முகமது அகமது அல் மர்ரி அவர்கள், துபாய் விமான நிலையங்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கியதிலிருந்து பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும் அவர் கூறுகையில், கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் உலகம் முழுவதிலுமிருந்து பயணிகளைப் பெற துபாய் தயாராக இருப்பதை அவர் வலியுறுத்தினார்.

புத்தாண்டு விடுமுறை நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதையும் அவர் கூறியுள்ளார். மேலும், இது ஐக்கிய அரபு அமீரகம் ஏற்றுக்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த உலகின் நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். அத்துடன் விமான நிலையத்தில் இருக்கும் ஸ்மார்ட் கேட்ஸை மீண்டும் திறந்தது பயணிகளுக்கு பாதுகாப்பான பயணம் மேற்கொள்வதை உறுதிப்படுத்த உதவியது என்றும் விளக்கியுள்ளார்.