ADVERTISEMENT

UAE: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 61,396 பேருக்கு போடப்பட்ட கொரோனா தடுப்பூசி..!! 50 சதவீத மக்கள்தொகைக்கும் மேல் தடுப்பூசி போட திட்டம்..!!

Published: 8 Jan 2021, 6:21 AM |
Updated: 8 Jan 2021, 6:21 AM |
Posted By: admin

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி ஐக்கிய அரபு அமீரகத்தில் சில வாரங்களுக்கு முன்பு பயன்பாட்டிற்கு வந்ததை தொடர்ந்து அமீரக குடிமக்கள் குடியிருப்பாளர்கள் என பல்வேறு தரப்பினரும் முதல் டோஸ் மற்றும் இரண்டாவது டோஸ் என்ற அடிப்படையில் கோவிட்-19 தொற்று நோய்க்கான தடுப்பூசியை போட்டு கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் அமீரக அரசால் வழங்கப்பட்டு வரும் இந்த இலவச கொரோனா வைரஸ் தடுப்பூசி கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 61,396 பேருக்கு போடப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மக்கள்தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் திட்டத்திற்கு ஏற்ப இந்த முயற்சி அமைந்துள்ளதாகவும் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும் இதற்கிடையில், சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகளுடன் சேர்ந்து கொரோனா வைரஸிற்கான தடுப்பூசியை போட்டுக்கொள்ள குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக தடுப்பூசி போட மக்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு தேசிய பிரச்சாரத்தை தொடங்குவதாகவும் கூறியுள்ளது.