ADVERTISEMENT

துபாய்: தடுப்பூசி போடுபவர்களுக்கு இலவச டாக்ஸி சேவை..!!

Published: 27 Jan 2021, 4:22 PM |
Updated: 27 Jan 2021, 4:23 PM |
Posted By: admin

துபாயில் கொரோனாவிற்கான தடுப்பூசி மேற்கொள்ளும் நபர்களுக்கு இலவச டாக்ஸி சேவையை வழங்குவதாக தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, துபாய் முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட தடுப்பூசி மையங்களில் இருந்து தடுப்பூசி பெற்றவர்கள் இலவசமாக தங்களது வீட்டிற்கு செல்லலாம் என கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்க விரும்புவோரை ஆதரிப்பதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக இது செயல்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இத்திட்டத்தின் கீழ் தடுபூசி மேற்கொள்பவர்கள் கரீம் பயன்பாட்டில் டாக்ஸி முன்பதிவு செய்யும் போது ‘ஹலவாக்’ (HALAVAC) என்ற ப்ரோமோ கோடைப் (promo code) பயன்படுத்தி இலவச பயணத்தை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஹலாவில், எங்கள் பயணிகள் மற்றும் சமூகத்திற்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர்களை ஆதரிப்பதற்கான எங்கள் உறுதிப்பாட்டைக் காட்ட எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்த விரும்புகிறோம். தடுப்பூசி எடுக்க விரும்புவோருக்கு, நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த முன்முயற்சி அவர்களுக்கு நிச்சயம் பலனளிக்கும் என்று நம்புகிறோம், எங்கள் பாதுகாப்பான மற்றும் எளிமையான சேவையை அவர்களுக்கு இலவசமாக வழங்குகிறோம்” என்று ஹலாவின் தலைமை நிர்வாக அதிகாரி கிளெமன்ஸ் டுடெர்ரே தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இந்த சலுகையின் விதிமுறைகளின்படி, இது இரண்டு சவாரிகளுக்கு 100 சதவீத கிரெடிட் பேக் (அதிகபட்சம் 30 திர்ஹம்ஸ்) வழங்குகிறது. இந்த கிரெடிட் பேக் பணம் அல்லது கார்டு மூலம் செலுத்தப்பட்ட தொகைக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் வாலட் (wallet) மூலம் செலுத்தப்பட்ட தொகைக்கு செல்லுபடியாகாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. Hala டாக்ஸி அறிவித்திருக்கும் இந்த சலுகை பிப்ரவரி 18 வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்ந்தெடுக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மையங்கள்

  • அலித்திஹாட் சுகாதார மையம்
  • ஹோர் அல் அன்ஸ் சுகாதார மையம்
  • அல் குசைஸ் சுகாதார மையம்
  • ஜபீல் ஆரம்ப சுகாதார மையம்
  • அல் மிஷார் ஆரம்ப சுகாதார மையம்
  • நாத் அல் ஹம்ர் ஆரம்ப சுகாதார நிலையம்
  • அல் பர்ஷா ஆரம்ப சுகாதார மையம்
  • அல் சஃபா ஆரம்ப சுகாதார மையம்
  • ஒன் சென்ட்ரல்
  • துபாய் பார்க்ஸ் அண்ட் ரிசார்ட்ஸ்

தள்ளுபடி பெறுவது எப்படி

  • கரீம் அப்ளிகேஷனை ஓபன் செய்து ஹலா டாக்ஸியைக் கிளிக் செய்யவும்.
  • நீங்கள் புறப்படும் இடம் மற்றும் மேற்குறிப்பிட்ட பட்டியலில் உள்ள ஏதாவது ஒரு தடுப்பூசி மையத்தினை தேர்ந்தெடுக்கவும்
  • உங்களுக்கு ஏற்ற வண்டிகளை தேர்ந்தெடுக்கவும்: Hala (துபாய் டாக்ஸி) அல்லது Hala Van (துபாய் டாக்ஸி).
  • இறுதியாக, தள்ளுபடியைக் கிளிக் செய்து, HALAVAC என்ற ப்ரோமோ கோடைச் சேர்க்கவும்.

 

ADVERTISEMENT