ADVERTISEMENT

Covid-19: தடுப்பூசியினை விரைவில் போட்டுக்கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்ட அமீரக தலைவர்கள்..!!

Published: 12 Jan 2021, 2:31 PM |
Updated: 12 Jan 2021, 3:03 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனாவிற்கு எதிராக இரு வகையான தடுப்பூசிகள் தீவிரமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது அமீரகத்தில் வழங்கப்பட்டிருக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கையானது 1 மில்லியனை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் அபுதாபியின் மகுட இளவரசரும் ஐக்கிய அரபு எமிரேட் ஆயுதப்படைகளின் துணை உச்ச தளபதியான மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகிய இருவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 1,275,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக அமீரகத்தின் முன்னணி ஊழியர்களை பாராட்டியுள்ளனர். அத்துடன் அமீரக தலைவர்கள் குடியிருப்பாளர்கள் அனைவரையும் கொரோனாவிற்கான தடுப்பூசியை போட்டுக்கொள்ளுமாறு வலியுறுத்தி செய்தி பகிர்ந்துள்ளனர்.

இது குறித்து மாண்புமிகு ஷேக் முகமது அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் COVID-19 தடுப்பூசியை அனைவரின் ஆரோக்கியத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் ஆதாயத்தையும் பாதுகாப்பதற்கான உத்தரவாதமாக எடுத்துக்கொள்ள ஊக்குவித்துள்ளார். மேலும், தொற்றுநோயைக் கட்டுப்படுத்த நாட்டிற்கு உதவிய அனைத்து பணியாளர்கள் மேற்கொண்ட முயற்சிகளையும் பாராட்டியுள்ளார்.

ADVERTISEMENT

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான யுத்தத்தில் ஐக்கிய அரபு அமீரகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. இன்று, ஐக்கிய அரபு அமீரகம் உலகளவில் தடுப்பூசி வழங்கப்படும் நாடுகளில் இரண்டாவது நாடாக திகழ்கிறது. தடுப்பூசி நம் நாட்டின் செயல்முறையை முழுமையாக மீட்டெடுக்கும். எனவே அனைவரும் தடுப்பூசியினை விரைவாக எடுத்துக்கொள்ளுமாறு அவர் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

ஷேக் முகம்மது பின் சையத் அவர்கள் தனது சமூக ஊடகப் பதிவில், “எங்கள் முன்னணி வீரர்களின் மகத்தான முயற்சிகளுக்கு நன்றி, 1,275,000 தடுப்பூசிகள் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரக குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. தடுப்பூசிகள் வேகத்தை அதிகரிப்பதன் மூலம் குறுகிய சாத்தியமான காலத்தில் அமீரகத்தின் முழு மீட்பு நிலையை எட்டுவோம் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.