ADVERTISEMENT

துபாய் மற்றும் அபுதாபியில் வேலை வாய்ப்பை வழங்கவிருக்கும் கத்தார் ஏர்வேஸ்..!! பணிகள் மற்றும் அதற்கான தகுதிகள் உள்ளே..!!

Published: 25 Jan 2021, 12:15 PM |
Updated: 25 Jan 2021, 12:17 PM |
Posted By: admin

கத்தார் நாட்டை சேர்ந்த விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ் ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு பணிகளுக்கு உரிய நபரை வேலைக்கு தேர்ந்தெடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

சவூதி அரேபியாவில் கடந்த ஜனவரி 5 ம் தேதி நடைபெற்ற வளைகுடா ஒத்துழைப்பு மாநாட்டில் ஒரு நல்லிணக்க ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதிலிருந்து கடந்த சில வருடங்களாக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற வளைகுடா நாடுகள் கத்தாருடனான விமானப் போக்குவரத்துக்கு மீண்டும் ஒப்புதல் அளித்தன. அதனை தொடர்ந்து கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனமானது ஜனவரி 27 ஆம் தேதி துபாய் இன்டர்நேஷனலுக்கான சேவைகளையும், ஜனவரி 28 ஆம் தேதி முதல் அபுதாபிக்கும் விமான சேவைகளை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்க இருப்பதை முன்னிட்டு கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனமானது ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு வேலைகளுக்கு தகுதியான ஊழியரை தேர்ந்தெடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விமான நிறுவனம் வெளியிட்டுள்ள வேலை மற்றும் அதற்கான தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

ஏர்போர்ட் செர்விசஸ் டூட்டி ஆஃபீசர் – துபாய்

  • வேலை தொடர்பான கல்லூரி அல்லது பல்கலைக்கழக தகுதி பெற்றிருத்தல் வேண்டும்
  • ஒரு விமான நிறுவனம் அல்லது தரைக்கட்டுப்பாடு செயல்பாடுகளை மேற்பார்வையிடும் பணி தொடர்பாக குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும்.
  • ஆங்கில மொழியில் சரளமாக தொடர்பு கொள்ள முடிபவராக இருத்தல் வேண்டும்.
  • எடை மற்றும் இருப்பு (weight and balance) பற்றிய அறிவு, ஆபத்தான பொருட்களை கையாளுதல் (Ramp handling and Dangerous Goods Regulations) போன்றவை குறித்த ஒழுங்குமுறைகள் தெரிந்திருக்க வேண்டும்
  • கடுமையான பணிச்சுமை இருந்த போதிலும் மிகச்சிறந்த வாடிக்கையாளர் சேவைகளை வழங்கும்நபராக இருத்தல் வேண்டும்
  • விமானத்தின் நிலைமைகள், சர்வதேச சிவில் விமானப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் பற்றிய நல்ல புரிதல் இருத்தல் வேண்டும்
  • பயணிகள் சேவைகள், பொருட்கள் சேவைகள், தரை செயல்பாடுகள், ஆபத்தான பொருட்கள் ஒழுங்குமுறைகள் மற்றும் ராம்ப் ஹாண்ட்லிங் போன்ற பகுதிகளில் அனுபவம் இருத்தல் வேண்டும்
  • கணினி பற்றிய உயர் கல்வியறிவைப் பெற்றிருக்க வேண்டும்
  • சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கும் நபராக இருத்தல் வேண்டும்

சீனியர் ஏர்போர்ட் சர்விசஸ் ஏஜென்ட்- துபாய்

  • வர்த்தக அல்லது தொழில் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்
  • ஒரு முன்னணி விமான நிறுவனத்தின் விமான நிலைய நடவடிக்கைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் தொடர்புடைய அனுபவத்துடன் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வேலை தொடர்பான அனுபவம் தேவை
  • ஆங்கில மொழியில் சரளமாக தொடர்பு கொள்ள முடிபவராக இருத்தல் வேண்டும்
  • கடுமையான பணிச்சுமை இருக்கும் இந்த வேலையில் சிறப்பாக செயல்பட அதிக ஆற்றலும் நேர்மறையான அணுகுமுறையும் அவசியம்
  • DCS குறித்த அனுபவமும் டிக்கெட் குறித்த அறிவும் தேவை
  • வாடிக்கையாளர்களுடனான சேவை மீட்பு சூழ்நிலைகள் உட்பட தவறாக கையாளப்பட்ட பொருட்களை நிர்வகிக்கும் திறன் இருத்தல் வேண்டும்
  • பயணிகளை கையாளுதல் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் குறித்த கல்வியறிவு பெற்றிருக்க வேண்டும்
  • கணினி பற்றிய உயர் கல்வியறிவைப் பெற்றிருக்க வேண்டும்
  • சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கும் நபராக இருத்தல் வேண்டும்

ஏர்போர்ட் சர்விசஸ் டூட்டி சூப்பர்வைசர் – துபாய்

  • பணி தொடர்புடைய கல்லூரி அல்லது பல்கலைக்கழக தகுதி இருத்தல் வேண்டும்
  • ஒரு விமான நிறுவனம் அல்லது தரைக்கட்டுப்பாடு செயல்பாடுகளை மேற்பார்வைஇடும் பணி தொடர்பாக குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும்
  • ஆங்கில மொழியில் சரளமாக தொடர்பு கொள்ள முடிபவராக இருத்தல் வேண்டும்.
  • எடை மற்றும் இருப்பு பற்றிய அறிவு, ஆபத்தான பொருட்களை கையாளுதல் போன்றவை குறித்த ஒழுங்குமுறைகள் தெரிந்திருக்க வேண்டும்
  • கடுமையான பணிச்சுமை இருந்த போதிலும் மிகச்சிறந்த வாடிக்கையாளர் சேவைகளை வழங்கும்நபராக இருத்தல் வேண்டும்
  • விமானத்தின் நிலைமைகள், சர்வதேச சிவில் விமானப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் பற்றிய நல்ல புரிதல் இருத்தல் வேண்டும்
  • பயணிகள் சேவைகள், பொருட்கள் சேவைகள், தரை செயல்பாடுகள், ஆபத்தான பொருட்கள் ஒழுங்குமுறைகள் மற்றும் ராம்ப் ஹாண்ட்லிங் போன்ற பகுதிகளில் அனுபவம் இருத்தல் வேண்டும்
  • கணினி பற்றிய உயர் கல்வியறிவைப் பெற்றிருக்க வேண்டும்
  • சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கும் நபராக இருத்தல் வேண்டும்

ஏர்போர்ட் சர்விசஸ் டூட்டி சூப்பர்வைசர் – அபுதாபி

சீனியர் ஏர்போர்ட் சர்விசஸ் ஏஜென்ட் – அபுதாபி

  • வர்த்தக அல்லது தொழில் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்
  • ஒரு முன்னணி விமான நிறுவனத்தின் விமான நிலைய நடவடிக்கைகளில் குறைந்தபட்சம் 1 வருடம் தொடர்புடைய அனுபவத்துடன் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வேலை தொடர்பான அனுபவம் தேவை
  • ஆங்கில மொழியில் சரளமாக தொடர்பு கொள்ள முடிபவராக இருத்தல் வேண்டும்
  • கடுமையான பணிச்சுமை இருக்கும் இந்த வேலையில் சிறப்பாக செயல்பட அதிக ஆற்றலும் நேர்மறையான அணுகுமுறையும் அவசியம்
  • DCS குறித்த அனுபவமும் டிக்கெட் குறித்த அறிவும் தேவை
  • வாடிக்கையாளர்களுடனான சேவை மீட்பு சூழ்நிலைகள் உட்பட தவறாக கையாளப்பட்ட பொருட்களை நிர்வகிக்கும் திறன் இருத்தல் வேண்டும்
  • பயணிகளை கையாளுதல் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் குறித்த கல்வியறிவு பெற்றிருக்க வேண்டும்
  • கணினி பற்றிய உயர் கல்வியறிவைப் பெற்றிருக்க வேண்டும்
  • சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கும் நபராக இருத்தல் வேண்டும்.

ADVERTISEMENT